PREPARED BY THULIRKALVI TEAM
8. பசுவுக்குக் கிடைத்த நீதி
இரண்டாம் பருவம்
வாங்க பேசலாம்
1. நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?
விடை : நான் மனுநீதிச் சோழனாக இருந்தால் கன்றை இழந்த பசுவை அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பேன். அப்பசு, கன்றை இழந்த கவலையின்றி இருக்க நிறைய பசுக்களையும் கன்றுகளையும் சேர்த்து வளர்ப்பேன்.
சிந்திக்கலாமா?
வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்?
விடை : அவர்கள் செய்தது சரியன்று. சிறுவர்களிடம் “நீங்கள் செய்யும் செயல் தவறானது. நாம் உயிர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்,” என்று கூறி அச்சிறுவர்கள் ஓணானைத் துன்புறுத்துவதைத் தடுப்பேன்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. இன்னல் – இச்சொல்லிற்குரிய பொருள் ……………….
அ) மகிழ்ச்சி ஆ) நேர்மை இ) துன்பம் ஈ) இரக்கம்
விடை : இ) துன்பம்
2. அரசவை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) அரச + அவை ஆ) அர + அவை இ) அரசு + அவை ஈ) அரச + வை
விடை : இ) அரசு + அவை
3. மண்ணுயிர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) மண் + ணுயிர் ஆ) மண் + உயிர் இ) மண்ண + உயிர் ஈ) மண்ணு + உயிர்
விடை : ஆ) மண் + உயிர்
வினாவிற்கு விடையளிக்க
1. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணியை அமைத்ததற்கான காரணம் என்ன?
விடை : மனுநீதிச் சோழன் தனது ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தான். அதனால் ஆராய்ச்சி மணியை அமைத்தான்.
2. பசு ஆராய்ச்சி மணியை அடித்தது ஏன்?
விடை : அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும் போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்துவிட்டது. அதனால் துயருற்ற பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.
3. பசுவின் துயரை மன்னன் எவ்வாறு போக்கினான்?
விடை : பசுவின் துயரைப் போக்க எண்ணிய மன்னன், தன் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைப் போக்கினான்.
அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக
1. ஆற்றொணா – தாங்க முடியாத
2. வியனுலகம் – பரந்த உலகம்
3. செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல்
4. கொடியோன் – துன்புறுத்துபவன்
5. பரம்பரை – தொன்றுதொட்டு
சொல் உருவாக்குக
கூடுதல் வினாக்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. மனுநீதிச் சோழன் பற்றி எழுதுக.
விடை : மனுநீதிச் சோழன் சோழ மன்னர்களுள் ஒருவன். முறைமை தவறாது ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்ட பேரிழப்பைத் தன் மகனைக் கொன்று சரிசெய்தவன். நீதியையே தன் பெயரில் வைத்துள்ளவன்.
2. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சிமணியைப் பற்றிக் கூறியது யாது?
விடை : ஆராய்ச்சிமணியின் நோக்கம் உடனுக்குடன் நீதி வழங்குவது என்றும், குடிமக்கள் எப்போது ஆராய்ச்சி மணியை ஒலித்தாலும் அவர்கள் முன் தானே ஓடோடிச் சென்று, அவர்களின் மனக்குறையை உடனடியாகத் தீர்த்து வைப்பேன் என்றும் மனுநீதிச் சோழன் கூறினான்.
3. பசுவின் கன்று எவ்வாறு இறந்தது?
விடை : அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று, எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்தது.
4. கன்றினை இழந்த பசுவின் எண்ணத்தை மன்னர் எவ்வாறு வெளிப்படுத்தினார்?
விடை : “நீயும் ஒரு மன்னனா? உனக்கு மகன் எப்படியோ அப்படியே எனக்கு என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யார் ஆறுதல் தருவார்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ என்று கேட்பது போல் இருக்கிறது” என்று பசுவின் எண்ணத்தை மன்னர் வெளிப்படுத்தினார்.
No comments:
Post a Comment