PREPARED BY THULIRKALVI TEAM

 சமூக அறிவியல் 

இரண்டாம் பருவம் 

சங்க கால வள்ளல்கள் 

அலகு 1 

பக்கம் 95

விடையளிக்க முயற்சி செய்க 

 1. எவையேனும் மூன்று வள்ளல்களின்  பெயர்களைக் கூறுக.

 பேகன், பாரி, அதியமான். 

2. கடையெழு வள்ளல்கள் எந்தக் காலகட்டத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்? 

 கடையெழு வள்ளல்கள் சங்க காலத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர். 

பக்கம் 97 

விடையளிக்க முயற்சி செய்க. 

1. பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது? 

விடை: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள – பழநி மலைப்பகுதி. 

 2. பேகன், தமது நடைப்பயணத்தின் போது என்ன பார்த்தார்? 

விடை: மயில் ஒன்று நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். 

 3. நடுங்கிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு, பேகன் என்ன செய்தார்?

 விடை: மயில் குளிரால் நடுங்குவதாகக் கருதிய பேகன் அதன் மீது போர்வையைக் கொண்டு போர்த்தினார். 

 பக்கம் 99 

விடையளிக்க முயற்சி செய்க.

1. பாரி ஆட்சி செய்த பகுதி எது?

 விடை: பறம்பு மலையில் உள்ள பறம்பு நாட்டை பாரி ஆட்சி செய்தார். 

 2. மலையடிவாரங்களிலிருந்து பறம்பு நாட்டிற்குச் செல்ல விடாமல் நிறுத்தப்பட்டவை எவை?

 விடை: தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் பறம்பு நாட்டிற்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டன. 

 3. முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி எதைக் கொடுத்தார்?

 விடை: முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி தன்னுடைய தேரைக் கொடுத்தார்.

 பக்கம் 100

 விடையளிக்க முயற்சி செய்க. 

 1. அதியமானுக்கு பரிசாக என்ன கிடைத்தது?

 விடை: அதியமானுக்குப் பரிசாக அரியவகை நெல்லிக் கனி கிடைத்தது.

 2. ஔவையார் என்பவர் யார்? 

விடை: ஔவையார் என்பவர் பழம் பெரும் புலவர். 

3. ஒளவையாருக்கு நெல்லிக்கனியை அதியமான் எதற்காகக் கொடுத்தார்?

 விடை: புலமைமிக்க ஒளவையாரைப் போல, வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்று மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய புலவர்கள் பலர் இருக்கமாட்டார்கள். எனவே ஒளவையார் நீண்ட காலம் வாழ வேண்டுமென்று அவருக்கு அதியமான் நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

PREPARED BY THULIRKALVI TEAM

 செயல்பாடு

 வள்ளல்கள் கொடுத்த பொருள்களைப் பட்டியலிடுக.

 1. பாரி – தேர்

 2. பேகன் – போர்வை 

3. அதியமான் – நெல்லிக்கனி

 பக்கம் 103

 விடையளிக்க முயற்சி செய்க. 

1. வல்வில் ஓரி எந்த மலைப்பாங்கான பகுதியை ஆட்சிசெய்தார்? 

விடை: வல்வில் ஓரி கொல்லிமலையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.

 2. சங்ககால வள்ளல்கள் எதன் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்?

 விடை: சங்ககால வள்ளல்கள் அவர்களது பண்புகளின் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்.

 பக்கம் 102 

செயல்பாடு 

 பின்வருவனவற்றைப் பொருத்துக.

 1. பாரி – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்

 2. பேகன் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்

 3. அதியமான் – இயற்கையிடம் அன்பு காட்டுதல் 

4. வல்வில் – மக்களை மதித்தல் 

விடை:   1. பாரி               – இயற்கையிடம் அன்பு காட்டுதல் 

                 2. பேகன்          – விலங்குகளிடம் அன்பு காட்டுதல் 

                 3. அதியமான் – மக்களை மதித்தல்

                 4. வல்வில்        – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல் 

 பக்கம் 103

 செயல்பாடு 

 கடையெழு வள்ளல்களையும், அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளையும் பட்டியலிடுக.



I. சரியான விடையைத் தேர்வு செய்க. 

1. மூவேந்தர்களுள் ஒருவர் ___________ ஆவார்.

 அ) ஆய் ஆ) பாரி இ) சேரன் ஈ) நள்ளி

 விடை: இ) சேரன் 

 2. கடையெழு வள்ளல்கள் ____________ களை ஆட்சி செய்தனர்.

 அ) சமவெளி ஆ) பாலைவனம் இ) ஆறு ஈ) மலைப்பகுதி 

விடை: ஈ) மலைப்பகுதி 

 3. ___________ மாவட்டத்தில் பறம்பு நாடு அமைந்துள்ளது.

 அ) தருமபுரி ஆ) திண்டுக்கல் இ) சிவகங்கை ஈ) நாமக்கல் 

விடை: இ) சிவகங்கை

 4. பேகன் _____________ மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தார். 

அ) பழநி ஆ) கொடைக்கானல் இ) பொதிகை ஈ) கொல்லி 

விடை: அ) பழநி

 5. அதியமான் ஒரு ______________ யை ஔவையாருக்குக் கொடுத்தார். 

அ) போர்வை ஆ) நெல்லிக்கனி இ) பரிசு ஈ) தேர் 

விடை: ஆ)நெல்லிக்கனி 

 II. பின்வருவனவற்றைப் பொருத்துக. 

 1. ஆய் – தருமபுரி மாவட்டம் 

2. அதியமான் – பொதிகை மலை 

3. வல்வில் ஓரி – சிவகங்கை மாவட்டம்

 4. பாரி – கொல்லிமலை 

விடை: 

1. ஆய்                 – பொதிகை மலை

 2. அதியமான் – தருமபுரி மாவட்டம் 

3. வல்வில் ஓரி – கொல்லிமலை 

4. பாரி                 – சிவகங்கை மாவட்டம் 

 III. சரியா? தவறா ? 

1. பாரி இயற்கையைப் பாதுகாக்கவில்லை. 

விடை: தவறு 

2. சங்க காலத்தில் ஏழு புகழ் பெற்ற வள்ளல்கள் இருந்தனர். 

விடை: சரி 

  3. நாம் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். 

விடை: சரி 

 4. நெடுமுடிக்காரி தோட்டிமலைப் பகுதியை ஆட்சி செய்தார். 

விடை: தவறு

 IV. பின்வரும் கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும். 

 1. சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதுக.

 விடை: சங்க இலக்கியம் என்பது பல்வேறு இலக்கிய நயம் வாய்ந்த செவ்வியல் பாடல்கள் கொண்டதாகும்.

 2. பாரியை எதிர்த்து வெற்றி அடைய இயலாத போது மூவேந்தர்கள் என்ன செய்தனர்? 

விடை: மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து பாரியின் பறம்பு நாட்டைத் தாக்கினர். உணவும் நீரும் பறம்பு மலைக்குச் செல்லாதபடி தடை செய்தனர். 

 3. அதியமான் ஏன் ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார்? 

விடை: வாழ்க்கையை எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்று கற்பிக்கக் கூடிய புலவர் ஔவையார். எனவே அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று அதியமான் ஔவையாருக்கு நெல்லிக் கனியைக் கொடுத்தார். 

 4. வல்வில் ஓரி எதனால் புகழடைந்தால்? 

விடை: வல்வில் ஓரி கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு வெகுமதி அளித்தார். எனவே அவர் புகழ் அடைந்தார்.

PREPARED BY THULIRKALVI TEAM


Post a Comment

Previous Post Next Post

Search here!