5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - பாடம் 1 - அறிவியல் தொழில் நுட்பம்- வினா- விடைகள் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 4 October 2022

5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - பாடம் 1 - அறிவியல் தொழில் நுட்பம்- வினா- விடைகள்

PREPARED BY  THULIRKALVI TEAM




இரண்டாம் பருவம் 
தமிழ்
பாடம் 1 
 அறிவியல் தொழில் நுட்பம்
பாடல் 
எதனாலே, எதனாலே?
பக்கம் : 3
மதிப்பீடு:
அ. பொருத்துக:

1. விண்மீன்   - ஒளிரும்
2. ரோஜாப்பூ - சிவக்கும்
3. மேகம்          - கறுத்திருக்கும்
4. இலை           - உதிரும் 
5. பறவை        - பறக்கும்

ஆ. வினாக்களுக்கு விடையளிக்க:

1. வானவில் எப்படி தோன்றுகிறது?
       மழை பெய்யும் போது சூரிய ஒளி நீர்த்துளிகளில் ஊடுருவுகிறது. இந்த ஒளி நீர்த்துளிகளின் பின்புறம்  எதிரொளிக்கிறது. இதனால் சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்கள் பிரிக்கப்பட்டு வானவில் உண்டாகிறது.

2. கடலில் ஏன் அலைகள் உண்டாகின்றன?
      நிலவுக்கும் புவியைப் போல் ஈர்ப்பு விசை உண்டு. நிலவின் ஈர்ப்பு விசையால் கடலில் அலைகள் உண்டாகின்றன.

இ. சிந்தனை வினா:

(i) நாமும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் (பெருங்கடல்கள் மற்றும் காற்று மண்டலம் உட்பட) பூமியுடனேயே சேர்ந்து, பூமி சுழலும் அதே வேகத்திலேயே சுழல்வதால், நமது சுழற்சியை நாம் உணர்வதில்லை.

 (ii) நாம் ஒரு காரில் வேகமாகச் செல்லும் போது, நாம் நமது இருக்கையிலிருந்து நகர்கிறோமா? பூமி சட்டென்று சுழல்வதை நிறுத்தினால் மட்டுமே, நம்மால் அதை உணர முடியும். ஆனால் அது முடியாத செயல்.

PREPARED BY  THULIRKALVI TEAM

உரைநடை 
அறிவின் திறவுக்கோல் 
பக்கம் - 7
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1 அறிவியலறிஞர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
அறிவியல் + அறிஞர்  

    அ) அறிவியல் + அறிஞர்               ஆ) அறிவு + அறிஞர்
     இ) அறிவியல் + லறிஞர்                ஈ) அறவியல் + அறிஞர்

2 பேருண்மை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
பெருமை + உண்மை

   அ) பேர் + உண்மை                         ஆ) பெரிய + உண்மை
    இ) பேரு + உண்மை                        ஈ) பெருமை + உண்மை

3 பத்து + இரண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது பன்னிரண்டு    
    அ) பன்னிரெண்டு                           ஆ) பன்னெண்டு
     இ) பன்னிரண்டு                               ஈ) பன்னண்டு
4 வேகமாக – இச்சொல்லுக்குரிய பொருள் விரைவாக
     அ) மெதுவாக          ஆ) விரைவாக       இ) கவனமாக          ஈ) மெலிதாக

5 மரப்பலகை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மரம் + பலகை
     அ) மரப் + பலகை      ஆ) மர + பலகை  இ) மரம் + பலகை     ஈ) மரப்பு + பலகை


ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக. 

 அ) நீராவி          - நீர் + ஆவி 
ஆ) புவியீர்ப்பு  - புவி + ஈர்ப்பு 

 இ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

 அ) சமையல் + அறை - சமயலறை 
ஆ) இதயம் + துடிப்பு - இதயத்துடிப்பு 
 ஈ. பொருத்துக. 

1. ஐசக் நியூட்டன்         - புவியீர்ப்பு விசை 
2. இரேனே லென்னக் - ஸ்டெதஸ்கோப்
3. ஜேம்ஸ் வாட்              - நீராவி இயந்திரம் 

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

1 மனிதனின் சிந்தனையால் எது வளரத் தொடங்கியது?

  மனிதனின் சிந்தனையால் அறிவியல் வளரத் தொடங்கியது. 

2 ஐசக் நியூட்டன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிய எந்த நிகழ்ச்சி காரணமாக இருந்தது?
  
    மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. இந்த நிகழ்ச்சியே ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிய காரணமாக இருந்தது. 

3 ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமான நிகழ்வு எது?
     சிறுவன் ஒருவன் குண்டூசியால் ' ஸீஸா' என்ற மரப்பலகையின் ஒரு முனையில் கீறிக் கொண்டிருந்தான். அதன் மறுமுனையில் மற்றொரு சிறுவன் காதை வைத்து அந்தக் கீறல் ஒளியைக் கேட்டான். இதனை ஒரு மருத்துவர் கண்டார். இந்நிகழ்ச்சி ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்க்குக் காரணமாக இருந்தது. 

4 நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
     நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட் 

5 அறிவியலறிஞர்களிடம் உற்றுநோக்கும் திறன் உள்ளது என்பதை
எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    - ஐசக் நியூட்டன் ஆப்பிள் விழுவதை உற்றுக் கவனித்தார்.

    - இரேனே லென்னக் திடப்பொருளின் வழியே ஒளி பெருக்கமடைந்து கடத்தபடுகிறது என்பதை உற்றுக் கவனித்தார். 

ஊ. சிந்தனை வினாக்கள்

1 ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் ஓர் அறிவியல் உண்மை உள்ளதா? உங்களால் விளக்க இயலுமா?

இரயில் தண்டவாளங்கள் அமைக்கும்போது இரு தண்டவாளங்களின் இணைப்புக்கிடையில் சிறிது இடைவெளி விடப்படுகிறது. 

காரணம் : கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகமாகும்போது, தண்டவாளங்கள் நீள்பெருக்கம் அடையும். இதனால் இடைவெளி விடப்படுகிறது.


2 . நீரில் நீந்தும் மீனால், நிலத்தில் வாழ முடியவில்லையே, ஏன்? 


நீரில் நீந்தும் மீனால் நிலத்தில் வாழ முடிவதில்லை . 

 காரணம் : மீன்களுக்கு நுரையீரல் இல்லை. அவற்றிற்குள்ள செவுள்களின் மூலம் அவை சுவாசிக்கின்றன. இந்த செவுள்கள் நீரில் உள்ள ஆக்ஸிஜனை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். காற்றிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள முடியாது. ஆதலால், மீன்களால் நீரில் மட்டுமே வாழ முடியும். 
PREPARED BY  THULIRKALVI TEAM
துணைப்பாடம்
பக்கம் - 11

வினாக்களுக்கு விடையளிக்க.

1. தன்னால் பறக்க முடியாததற்கு அமுதா கூறிய காரணம் என்ன?

பறவையைவிட அதிக எடையுடன் இருப்பதால்தான் தன்னால் பறக்க முடியவில்லை என்று அமுதா கூறினாள்.

2. பறப்பதற்கு ஏற்றவகையில் பறவையின் உடலமைப்பு எவ்வாறு உள்ளது?
பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன.

3. பறக்கும் விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார், யார்?
ரைட் சகோதரர்கள்.

சிந்தனை வினா.
பறவைகளைப்போல் பறக்க முடிந்தால், நமக்கு எத்தகைய உடலமைப்பு
இருக்கவேண்டும்?

பறவைகளைப் போல் பறக்க முடிந்தால் நமக்கு படகைப் போல் உடலமைப்பு இருக்க வேண்டும்.
PREPARED BY  THULIRKALVI TEAM

மூவிடப்பெயர்கள்
பக்கம் - 13
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1 நீங்கள் எங்குச் சென்றீர்கள்?
அ) நீ ஆ) நாங்கள் இ) நீங்கள் ஈ) அவர்கள்

2 செடியில் பூக்கள் பூத்திருந்தன. அவைஅழகாக இருந்தன.
அ) அது ஆ) அவை இ) அவள் ஈ) அவர்

3 இந்த வேலையை நான் செய்தேன்.
அ) அவன் ஆ) அவர் இ) நான் ஈ) அவள்

ஆ. பொருத்துக.

1 தன்மைப் பெயர்         - நாங்கள்
2 முன்னிலைப் பெயர் - நீங்கள்
3 படர்க்கைப் பெயர்     -அவர்கள் 

இ. உரைப்பகுதியில் பொருத்தமான இடப்பெயர்களை நிரப்புக.

தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு
மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது.
அது எல்லாரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை
அவர்களைக் கண்டதும் நீங்கள்  யார்? எங்கிருந்து வருகிறீர்கள்
என்று கேட்டது. உடனே , இருவரும் நாங்கள்  அருகிலிருக்கும் பள்ளியில்
படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் நீ  யார்? இங்கு என்ன
செய்கிறாய்? என்று கேட்டான்.

ஈ. தொடர்களிலுள்ள பெயர்ச்சொற்களைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என வகைப்படுத்துக.

1 நீங்கள் எங்குச் சென்றீர்கள்? நீங்கள் – முன்னிலை
2 குழலி படம் வரைந்தாள்          அவள் - படர்க்கை 
3 கதிர் நேற்று வரவில்லை          அவன் - படர்க்கை 
4 நான் ஊருக்குச் சென்றேன்    நான் - தன்மை 
5 மயில் ஆடியது                              அது - படர்க்கை 
PREPARED BY  THULIRKALVI TEAM
மொழியை ஆள்வோம்
பக்கம் - 15
உ. தொடரில் அமைத்து எழுதுக.

1. பறவை      - பறவை ஆகாயத்தில் பறந்து செல்கிறது 
2. விமானம்  - காற்றில் பயணம் செய்ய விமானம் உதவுகிறது 
3. முயற்சி      -இடைவிடாத முயற்சி வெற்றி தரும் 
4. வானவில்  -வானவில் ஏழு வண்ணங்களை உடையது 
5. மின்மினி  -இருட்டில் மின் மினி அழகாக ஒளிரும் 

ஊ. பொருத்துக:

1. மின்மினி                     -லூசிஃபெரேஸ் என்சைம்
2. இறகின் தொகுப்பு  - சிறகு
3. வானவில்                     - நீர்த்துளி எதிரொளிப்பு
4. காற்றுப்பைகள்        - பறவையின் இறகு

PREPARED BY  THULIRKALVI TEAM

எ. உரைப்ப குதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன்
ஆக்ஸைடுகள் அதிகரிக்கின்றன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும்,மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப்பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லிகிராமுக்குக் குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்புஅதிகமாக இருக்கிறது. அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும்,சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

வினாக்கள்
1. அமில மழை எங்கு அதிகமாகப் பெய்கிறது?

தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாக பெய்கிறது 

2. அமில மழையின் பாதிப்பு எங்கு அதிகமாக இருக்கும்?

நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் அந்த நிலபரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது 

3. மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரை இழக்கக் காரணம் என்ன?

அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன 

4. பொருள் தருக. 

  அதிகரித்தல் - கூடுதல் 
   பிரதேசம்       - பகுதி 
   பாதிப்பு          - மோசமான விளைவு 

ஏ. வண்ண எழுத்திலுள்ள பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் எழுதுக.

1. நான் தபால் நிலையத்திற்குச் சென்றேன். அஞ்சல் 
2. ஓய்வு நேரத்தில் ரேடியோ கேட்பேன்             வானொலி 
3. பஞ்சாயத்துக் கூட்டம் நாளை கூடுகிறது    ஊராட்சி மன்றம் 
4. ஹோட்டலில் உணவு தயாராக உள்ளது        உணவகத்தில் 
5. அலமாரியில் துணிகள் உள்ளன.                     நிலைப்பேழையில்

பாடலை நிறைவு செய்க :

செடிகள் நாளும் வளருதே
ஏன்? ஏன்? ஏன்?
பனிமலை உருகிப் போகுதே
ஏன்? ஏன்? ஏன்?
மீன்கள் நீரில் நீந்துதே 
ஏன் ? ஏன் ? ஏன்? 
விண்மீன் இரவில் ஒளிருதே 
ஏன் ? ஏன் ? ஏன்? 

PREPARED BY  THULIRKALVI TEAM

ஒரே ஓசையில் முடியும் பெயர்களைக் கொண்ட படங்களை இணைக்க.


2. சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குவோம்

பட்டுக்கோட்டை

பட்டு         படை      படு         பட்டை  
கோடை  கோட்டு    கோடு     கோட்டை 

குறிப்புகளை கண்டறிந்து விடை அறிக 

1 பறக்கவிட்டு மகிழ்வோம்  - பட்டம் 
2 நீல நிறத்தில் காட்சியளிக்கும் - வானம் 
3 கடற்பயணத்திற்கு உதவும் - கப்பல் 
4 படகு செலுத்த உதவும் - துடுப்பு 
5 உயிரினங்களுள் ஒன்று - குதிரை 
6 இதன் உதவியால் வானில் பயணிக்கலாம் - விமானம் 
7 பறவைகள் இதுபோன்ற உடலமைப்பு கொண்டுள்ளது - படகு 
8 ஏழு நிறங்கள் கொண்டது - வானவில் 
9 இராமன் இதன் மூலம் எதிரொளிப்பு விளையாட்டு விளையாடினான் - கண்ணாடி 
10 பொழுது விடிவது - காலை ..

4. பாடப்ப குதியில் ‘சுற்றும்முற்றும், ஓட்டமும்நடையுமாய் என்று சொற்கள்
இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு இணைச்சொற்கள் என்று பெயர். இவைபோன்று
நான்கு சொற்கள் எழுதுக.

மப்பும் மந்தாரமுமாய் 
கொத்தும் குலையுமாய்
குறுக்கும் மறுக்குமாய் 
எள்ளும் கொள்ளுமாய் 

5. ஒரே ஓசையுடைய சொற்களின் பொருள் எழுதுக.

1. தேநீர் = தேயிலையைக் கொண்டு கொதிக்க வைத்த நீர் (டீ)
    தேனீர் = தேனும் நீரும் கலந்த நீர்

2. பரவை =கடல் 
    பறவை = பறந்து செல்லும் உயிரினம்
 
3. கோரல் = கேட்டல் , விண்ணப்பித்தல் 
    கோறல் = கொள்ளுதல் 

4. வன்னம் = எழுத்து 
    வண்ணம் = நிறம் 

5. எதிரொலி = ஒலி மீண்டும் ஒலிப்பது 
    எதிரொளி = ஒளி மீண்டும் திரும்பி வருவது 

6. ஒரு சொல்லைப் பிரித்து இரு பொருள் எழுதுக.

1. பலகை = மரப்பலகை
     பல + கை = பல கைகள்

2. அந்தமான் = அந்தமான் தீவுகள் 
    அந்த + மான் = அங்கே உள்ள மான் 

3. தாமரை = தண்ணீரில் வாழும் மலர் 
    தா + மரை= தாவும் மரை(மான்)

4. பழம்பால் =பழம் மற்றும் பால் 
    பழம் + பால் = பழமையான பால்
 
5. மருந்துக்கடை = மருந்து விற்கப்படும் கடை 
    மருந்து + கடை = மருந்தாக இதைக் கடைந்துவிடு 

PREPARED BY  THULIRKALVI TEAM



 

No comments:

Post a Comment