5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - பாடம் 2 - நாகரிகம் / பண்பாடு - புத்தக வினா- விடைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 19 October 2022

5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - பாடம் 2 - நாகரிகம் / பண்பாடு - புத்தக வினா- விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM 

 தமிழ்
பாடம் 2 
 நாகரிகம் / பண்பாடு
 புத்தக வினா- விடைகள்

Chapter 5. 1


 
திருக்குறள்

மதிப்பீடு 
பக்கம் - 22

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

 1. ‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள்……………….. 

அ) உயர்ந்த ஆ) பொலிந்த இ) அணிந்த ஈ) அயர்ந்த 

Answer: அ) உயர்ந்த 

  2. பெருஞ்செல்வம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……….. 

அ) பெருஞ் + செல்வம் ஆ) பெரும் + செல்வம் இ) பெருமை + செல்வம் ஈ) பெரு + செல்வம் 

Answer: இ) பெருமை + செல்வம் 

 3. பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….. 

அ) பண் + புடைமை ஆ) பண்பு + புடைமை இ) பண்பு + உடைமை ஈ) பண் + உடைமை 

Answer: இ) பண்பு + உடைமை

4. அது + இன்றேல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ………… 

அ) அது இன்றேல் ஆ) அதுயின்றேல் இ) அதுவின்றேல் ஈ) அதுவன்றேல்

 Answer: இ) அதுவின்றேல்

 5. பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் …………… 

அ) நயன் ஆ) நன்றி இ) பயன் ஈ) பண்பு 

Answer: அ) நயன்

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக. 


அ) இவ்விரண்டும் = …………………… + …………………………. 

ஆ) மக்கட்பண்பு = …………………… + …………………………. 

Answer: 

அ) இவ்விரண்டும் – இ + இரண்டும் 

ஆ) மக்கட்பண்பு – மக்கள் + பண்பு

 இ. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.

ஈ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

அன்புடைமை        பண்புடைமை 
பண்புடையார்       மண்புக்கு 

உ. அன்புடைமை, பண்புடைமை போல் ஈற்றில் ‘மை’ என முடியும்படி நான்கு சொற்கள் எழுதுக.

அறிவுடைமை 
வாய்மை 
நேர்மை 
உண்மை 

ஊ. வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. பண்புடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் யாவை? 

Answer: அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயலாகும்.

 2. ‘மரம் போன்றவர்’ எனத் திருக்குறள் யாரைக் குறிப்பிடுகிறது? 

Answer: அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவர் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது. 

 3. பண்பில்லாதவன் பெற்ற செல்வம் எவ்வாறு பயனிலாது போகும்? 

Answer: பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்று பயனில்லாமல் போகும். 

  எ. சிந்தனை வினா. 

 ஒருவரின் பண்புகளைக் கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன? 

Answer: ஒருவரின் பண்புகளைக் கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று புறநானூறு கூறும். ஒருவர் நற்செயல்களைச் செய்து, அன்புடன் பேசுதல், பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணுதல், இன்சொல் பேசுதல் ஆகிய நற்பண்புகளுடன் செயல்புரிந்தால் அவரை இவ்வுலகம் மதிக்கும் என்பதில் ஐயமில்லை 

 கற்பவை கற்றபின்

2. நம்மிடம் இருக்கவேண்டிய நற்பண்புகளைப் பட்டியலிடுக.

 Answer: இரக்கம் ஈகை நடுவுநிலை கருணை சான்றாண்மை (நெறி பிறழாமல் வாழ்வது) 

3. பண்பா, பணமா எதற்கு முதன்மையளிக்க வேண்டும்? பட்டிமன்றத்திற்கு உரை தயாரித்துப் பேசுக.

Answer: 

நடுவர் – கமலநாதன் :

 நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு பண்பா, பணமா எதற்கு முதன்மையளிக்க வேண்டும்? ஒரு மனிதன் தொழிலில் சிறப்படைய வேண்டும்; குடும்பத்துக்கு நல்ல தலைவனாக இருக்க வேண்டும்; சமுதாயத்தில் சிறந்த மதிப்போடு வாழ வேண்டும். இம்மூன்றும் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவன் சிறந்த வாழ்க்கையை வாழ்வதாக அர்த்தம். இவ்வுலகத்தில் குறையே இல்லாத மனிதன் யாருமே கிடையாது. அனைவரிடத்திலும் ஏதோ ஒரு குறை இருந்தே தீரும். இப்போது பண்பே என்ற தலைப்பில் பேச கண்ணனை அழைக்கிறேன்.

 பண்பே – கண்ணன் : 

பண்பு எல்லா உயிருக்கும் ஆன்மாவிற்கும் இன்றியமையாத ஒன்று. பிறர் மனம் நோகாமல் சொற்களை கையாள்வது ஒரு பண்பு! செயல்படுவது ஒரு பண்பு. அறிமுகம் ஆனவர்களுக்கு உதவும்போது, மனிதன் ஆகிறான். அதுவே, அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவும்போது இறைவன் ஆகிறான். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள், பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது. இனிமையாக பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திரும்பிக் கிடைக்கும். நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியாரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். ஆகவே பண்பிற்கே முதன்மையளிக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன். 

  பணமே – நிரஞ்சனா : 

வள்ளுவர் கூறும் அறம், பொருள், இன்பம் என்கின்ற மூன்றில் பொருளை மட்டும் பெற்றுவிட்டால் அறமும், இன்பமும் தானே வந்துவிடும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை ,பணம் பத்தும் செய்யும், பணம் இல்லாதவன் பிணம், பணம் பந்தியிலே- என்பன பணத்தின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் பழமொழிகள். இந்தக் கலியுகக் காலத்தில் பணம் இல்லாதவன் பிணமாகக் கருதப்படுவான். பணம் என்றால் என்ன? உங்கள் இமைக் கதவுகளை மூடி சிந்தனை என்னும் சன்னலைத் திறந்து பார்த்தால் பதில் கிட்டும். பணம் என்றால் ஒரு மதிப்புள்ள நாணயம் என்று பொருள்படும். பணம் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் முதல் இடத்தை வகிக்கிறது. ஆகவே பணத்திற்கே முதன்மையளிக்க வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன். 

  நடுவர் – கமலநாதன் : கடவுளின் படைப்பில் திசைகள் எட்டு, ஸ்வரங்கள் ஏழு, சுவைகள் ஆறு, நிலங்கள் ஐந்து, காற்று நான்கு, மொழி மூன்று (இயல், இசை, நாடகம்), வாழ்க்கை இரண்டு (அகம், புறம்) என்று படைத்த இறைவன், ஒழுக்கத்தை ஒன்றாக மட்டுமே படைத்துள்ளான். நேர்மை, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், அவன் மனதை பிறர் படிப்பார்கள். அங்கே பண்பு ஓங்கும். எனவே, பண்பு கொண்டவனே சிறந்த மனிதனாகிறான். 

 கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக. 

 1. நன்பால் – பொருள் தருக . அ) செல்வம் ஆ) நல்ல பால் இ) உரிய பண்பு ஈ) திரிவது 

Answer: ஆ) நல்ல பால் 

 2. திருக்குறள் ……………. எனப் போற்றப்படுகிறது. 

அ) உலகப்பொதுமறை ஆ) பதினெண்கீழ்க்கணக்கு இ) அறத்துப்பால் ஈ) பண்புடைமை 

Answer: அ) உலகப்பொதுமறை 

 விடையளி : 

 1. எப்பண்புகளை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்? 

Answer: நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியாரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். 

2. உலகம் எதனால் மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும்?

 Answer: நற்பண்பு உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. இல்லையெனில், அது மண்ணோடு மண்ணாகி அழிந்து விடும்.

Chapter 5.2 

தமிழர்களின் வீரக்கலைகள்

மதிப்பீடு
பக்கம் - 29

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 

 1. தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது ………….. 

அ) சிலம்பம் ஆ) மற்போர் இ) மட்டைப்பந்து ஈ) நீர் விளையாட்டு

 Answer: இ) மட்டைப்பந்து 

 2. ‘மஞ்சு விரட்டு’ என்பதைக் குறிக்கும் விளையாட்டு ………………… 

அ) மற்போர் ஆ) ஏறுதழுவுதல் இ) சிலம்பாட்டம் ஈ) வில்வித்தை 

Answer: ஆ) ஏறுதழுவுதல்

 3. மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………… 

அ) மற் + போர் ஆ) மள் + போர் இ) மல் + போர் ஈ) மறு + போர்

 Answer: ஈ) மறு + போர் 

 4. தன் + காப்பு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………… 

அ) தன்காப்பு ஆ) தண்காப்பு இ) தனிகாப்பு ஈ) தற்காப்பு 

Answer: ஈ) தற்காப்பு 

 5. ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ……. 

அ) சிலம்பாட்டம் ஆ) வில்வித்தை இ) ஏறுதழுவுதல் ஈ) வழுக்கு மரம் ஏறுதல்

 Answer: ஆ) வில்வித்தை

  ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக. 

அ) சிலம்பு + ஆட்டம் = ……………………. 

ஆ) வீரம் + கலை = ……………………. 

Answer: 
அ) சிலம்பு + ஆட்டம் – சிலம்பாட்டம் 

ஆ) வீரம் + கலை – வீரக்கலை

 இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக. 

அ) தனக்கென்று= ……………………. + ………………………. 

ஆ) கொடைத்திறம்= ……………………. + ………………………. 

Answer: 

அ) தனக்கென்று – தனக்கு + என்று

 ஆ) கொடைத்திறம் – கொடை + திறம் 

  ஈ. பொருத்துக 

 1. காளை – கம்பு 

2. சிலம்பு – மூங்கில் 

3. சிறுவாரைக்கம்பு – திமில் 

4. தாளாண்மை – உழவு வேளாண்மை – முயற்சி 

Answer: 1. காளை – திமில் 

2. சிலம்பு – கம்பு 

3. சிறுவாரைக்கம்பு – மூங்கில்

 4. தாளாண்மை — முயற்சி

 5. தாளாண்மை – உழவு 

 உ. வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக. 

Answer: சிலம்பாட்டம் ஏறுதழுவதல் 

2. ஏறுதழுவுதல் என்றால் என்ன? 

Answer: ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும். 

 3. சிலம்பாட்டம் – பெயர்க்காரணம் தருக. 

Answer: சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் உண்டு. 

  4. வல்வில் ஓரியின் வில்லாற்றல் சிறப்பைக் கூறுக. 

Answer:

 (i) கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ‘வல்வில் ஓரி’ வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.

 (ii) அவர், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பெரிய யானையொன்று எதிர்ப்பட, அதன் மீது அம்பெய்தினார். 

 (iii) அந்த அம்பானது, அப்பெரிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீர்ந்தது என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

 (iv) படைத் திறமும் கொடைத் திறமும் கொண்டு விளங்கிய வல்வில் ஓரியை வன்பரணர் இவ்வாறு பாடி மகிழ்ந்தார். 

  5. மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது? 

Answer: இருவர் கைகோர்த்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவர் போர் செய்வதே மற்போர்.

 ஊ. சிந்தனை வினாக்கள். 

1. சிலம்பாட்டம் தற்காப்புக் கலைகளுள் ஒன்று. ஏன்? 

Answer:
(i) சிலம்பாட்டம் தற்காப்புக் கலைகளுள் ஒன்றுதான். 

 (ii) ஏனென்றால் சிலம்பு எடுத்து சுழற்றும்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. 

 (iii) கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.

 (iv) ஒரே ஒரு தடியைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பாட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். 

 2. உடலில் உறுதி உடையவரே உலகை ஆளும் உள்ள உறுதி உடையவர். இவ்வரிகளை பற்றி உமது கருத்து யாது? 

Answer: ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நம் உடல் நலம் நன்றாக இருந்தால்தான் உள்ளமும் நன்றாக இருக்கும். உடல் வலிமை பெறும்போது எதையும் தாங்கும் திறனைப் பெற முடியும். தெளிவான மனம் அமையும். சோம்பலின்றி சுறுசுறுப்பாகச் செயலாற்ற முடியும். உள்ளம் துடிதுடிப்பாக இருக்கும். அதனால் உலகை ஆளும் அளவிற்கு உள்ள உறுதியைத் தருகிறது. 

எ. எதிர்ச்சொல் உருவாக்குக.


கற்பவை கற்றபின்

  1. உங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றிப் பேசுக.

 Answer: எங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று வழுக்கு மரம். ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மர விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்பட்டு, மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவுவார்கள். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்பட்டு இருக்கும்.

 வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக எங்கள் கிராமத்தில் இவ்விளையாட்டு நடத்துகிறார்கள். 

  2. உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகள் எவை? ஏன்?

 Answer: எனக்குப் பிடித்த விளையாட்டு கபடி. கபடி விளையாட்டு ஓர் அற்புதமான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு உடல் வலிமை வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு ஏறு தழுவுதல்) தயாராகும் முன் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. எதிரணிக்குச் செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். 

 அவ்வீரரைத் தொடவிடாமல் மடக்கிப் பிடித்து, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்குச் சமமாகும். மூச்சு விடாமல் ‘கபடி கபடி’ என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். அப்படிப்பட்ட ஓர் அருமையான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு நல்ல உடல் வலிமை வேண்டும், உடல் வலிமை இருந்தால் தான் இந்த விளையாட்டு வீரர்கள் அதில் சாதனை படைக்க முடியும். தம் அணிக்குத் திரும்பும் முன் ‘கபடி கபடி’ என்று பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழந்து விடுவார். 

  3. விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் எவை? அவற்றைப் பற்றி உங்களுடைய கருத்துகளைக் கூறுக. 

Answer: விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் : தவளை ஓட்டம் இசை நாற்காலி கயிறு இழுத்தல் பானை உடைத்தல் மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் அவற்றைப் பற்றி என் கருத்து : திருவிழாக்கள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை. உழைத்து உழைத்துக் களைத்தவர்கள் தங்களின் களைப்பைப் போக்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்டவைதான் திருவிழாக்களும் விளையாட்டுகளும் விளையாட்டுகளின் மூலம் ஒற்றுமை உணர்வு உண்டாகிறது. விட்டுக் கொடுக்கும் பழக்கம் வளர்கிறது. தன்னம்பிக்கை கூடுகிறது. உடல் உறுதியடைகிறது. மனவலிமை பெறுகின்றனர். திட்டமிட்டுச் செயல்படக் கற்றுக் கொள்கின்றனர். ஒழுக்கத்துடன் இருக்க விளையாட்டு பயன்படுகிறது. 

 வினாக்கள் சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக. 

 1. ஏறுதழுவுதலுக்கு உகந்த நிலம் ………. 

அ) நெய்தல் ஆ) முல்லை இ) பாலை ஈ) குறிஞ்சி

 Answer: ஆ) முல்லை 

 2. ஏறுதழுவுதல் மறுபெயர் ….. 

அ) சிலம்பாட்டம் ஆ) சிலம்பம் இ) மற்போர் ஈ) மஞ்சுவிரட்டு

 Answer: ஈ) மஞ்சுவிரட்டு 

 3. சிலம்பு என்பதன் பொருள் 

அ) கொம்பு ஆ) சுருள்பட்டா இ) ஒலித்தல் ஈ) வளரி

 Answer: இ) ஒலித்தல் 

  விடையளி : 

 1. சிலம்பக் கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பெயர்களை எழுதுக. 

Answer: மான்கொம்பு பிச்சுவா கத்தி சுருள் பட்டா வளரி

 2. மற்போரில் வெற்றிப் பெற்றவர்களை எவ்வாறு அழைப்பார்கள்? 

Answer: மற்போரில் வெற்றிப் பெற்றவர்களை ‘மல்லன்’ என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. மற்போரில் சிறந்து விளங்கியமையாலேயே மாமல்லன் என்று அக்கால அரசர்கள் போற்றப்பெற்றனர்.

Chapter 5.3 

கங்கை கொண்ட சோழபுரம்


 மதிப்பீடு
பக்கம் - 34

வினாக்களுக்கு விடையளிக்க.

 1. முதலாம் இராசேந்திர சோழனை ஏன் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்?

 Answer: முதலாம் இராசேந்திர சோழன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்ததன் அடையாளமாகத்தான் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம். 

2. சிங்கமுகக் கிணறு – குறிப்பு எழுதுக. 

Answer: சிங்க வடிவத்தில் சிங்கமுகக் கிணறு அமைந்திருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றில் ஒரு வாயில் இருக்கும். 

 3. சோழ கங்கப் பேரேரிக்கு நீர் எங்கிருந்து வருகிறது?

 Answer: மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவு வரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைத்தனர். சோழ கங்கப் பேரேரி இன்றி பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. 

 4. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலுள்ள வாயில்களின் பெயர்களைக் கூறுக. 

Answer: தெற்குப் பக்க நுழைவாயில் வடக்குப் பக்க நுழைவாயில். 

 சிந்தனை வினா. 

 1. ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் என்ன ஆகும்? கருத்துகளைக் குழுவில் பகிர்ந்து கொள்க. 

Answer: 

மாணவன் 1 : ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் மழைநீரைத் தேக்கி வைக்க முடியாது.

 மாணவன் 2 : நிலத்தடி நீரின்றி மக்கள் துன்பப்படுவர். 

மாணவன் 3 : விவசாயத்திற்குப் போதுமான நீர் கிடைக்காது. 

மாணவன் 1 : நீர்நிலைகள் மண் மூடிய நிலையில் உள்ளதால், மழைக்காலங்களில் வரும் மழைநீர் சிறிதளவே தேங்கும். உபரிநீர் வீணாகக் கடலில் கலந்துவிடும். 

மாணவன் 2 : கோடைக்காலங்களில் நீர்நிலைகளைத் தூர்வாரி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும். 

கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அக்கோவிலிலுள்ள சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றியும் வகுப்பறையில் கலந்துரையாடுக. கலந்துரையாடுதல் (சிற்பங்களின் சிறப்புகள்) 

 மாணவன் 1 : நீ சென்று வந்த கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பற்றிக் கூறுகிறாயா?

 மாணவன் 2 : கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. ஆனால் அக்கோயிலைவிட உயரம் குறைவானது. 

மாணவன் 1 : அப்படியா? 

மாணவன் 2 : ஆமாம். அதற்கடுத்து செங்கற்களால் கட்டப்பட்ட நந்திச்சிலை இருந்தது. இக்கோவிலின் வாயில், தரைமட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் இருப்பது தனிச்சிறப்பாகும். அது மட்டுமா? தூண்களிலும் கோவில்களிலும் அழகான சிற்பங்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தின. 

மாணவன் 3 : நான்கூட இக்கோவிலுக்கு ஒருமுறை சென்றுள்ளேன். கோவிலின் வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபக்கங்களிலும் உள்ள கலைச் செல்வி மற்றும் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி ஆகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை என்று என் அப்பா கூறியுள்ளார்.

 மாணவன் 2 : இக்கோவிலில் சிங்க முகக் கிணறு ஒன்று உள்ளது. மாணவன் 1 : சிங்க முகக் கிணறா? அது என்ன? 

மாணவன் 2 : கிணறு சிங்கம் வடிவத்திலிருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றிலே ஒரு வாயில் இருக்கும். சிங்க வடிவத்தில் இருப்பதால் சிங்கமுகக் கிணறு என்ற பெயர் பெற்றது.

 மாணவன் 1 : சோழர்களின் சிற்பக்கலைக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? 

மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இந்தியச் சிற்ப வரலாற்றில் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்கள் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளன. கங்கை கொண்ட சோழபுரம் சிற்பக்கூடமாக அமைந்துள்ளது. இச்சிறப்புகளால் கங்கை கொண்ட சோழபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. 

மாணவன் 1 : இது நம் தமிழகத்திற்கே பெருமையன்றோ ?

 மாணவர்கள் : ஆமாம். பெருமைதான். 

  

Chapter 5.4 


இணைப்புச்சொற்கள்


மதிப்பீடு
பக்கம் - 36

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 

 1. ‘அதனால்’ என்பது ……….. 

அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல் ஈ) இணைப்புச்சொல்

 Answer: ஈ) இணைப்புச் சொல்

  2. கருமேகங்கள் வானில் திரண்டன ………………..மழைபெய்யவில்லை .இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல் 

அ) எனவே ஆ) ஆகையால் இ) ஏனெனில் ஈ) ஆயினும் 

Answer: ஈ) ஆயினும் 

 3. கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ………… அவன் நண்ப ன் மிதிவண்டியே போதும் என்றான். 

அ) அதனால் ஆ) ஆதலால் இ) இருந்தபோதிலும் ஈ) ஆனால் 

Answer: ஈ) ஆனால் 

 ஆ. கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக. 

 1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். 

(உம்).
  Answer: நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம். 

 2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை . (ஆனால்) 

Answer: வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை. 

 3. பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்) 

Answer: பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. 

 4. முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்)

 Answer: முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில் அவனுக்கு உடல்நலமில்லை. 

  5. அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே) 

Answer: அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. ஆகவே கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். 

  இ. கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச்சொற்களை இணைத்து எழுதுக. (ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, ஆகவே, பிற) அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.

 …………………….. , சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. …………………….., அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. …………………….., அதனைக் கண்டு…………………….. விலங்குகள் அஞ்சின………………………, அது தனியாகக் குகையில் வசித்தது. …………………….. அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. …………………….. குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன்…………………….. விலங்குகள் அஞ்சியோடின………………………, அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா? 

Answer: (ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, ஆகவே, பிற) அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆனால், சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. ஆகையால், அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. எனவே, அது தனியாகக் குகையில் வசித்தது. ஆனால் அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. அதனால் குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. ஏனெனில், அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா? 

 ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. இணைப்புச் சொற்கள் எதற்குப் பயன்படுகின்றன? 

Answer: தங்கு தடையின்றிப் பேசவும், எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன.

 2. இணைப்புச்சொற்களுள் நான்கு எழுதுக. 

Answer: அதனால் ஆகையால் அப்படியானால் ஆதலால்

  3. இணைப்புச்சொற்களைப் பயன்படுத்தி, எவையேனும் இரண்டு தொடர்களை எழுதுக.

 Answer: கண்ணன் வந்துவிடுகிறேன் என்றான். ஆனால், இன்னும் வரவில்லை. நான் தாய்நாட்டிலேயே பணியாற்ற விரும்புகிறேன். ஆகையால், வெளிநாடு செல்லமாட்டேன். 

 கூடுதல் வினா 

 விடையளி : 

 1. இணைப்புச்சொற்கள் பற்றி எழுதுக. 

Answer: தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர். 

 
 2. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் கட்டடக்கலைகள் பற்றிய செய்திகளைக் கேட்டு அறிந்து கொள்க. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

 ஆ. பேசுதல் : 

1. நீங்கள் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்து 5 மணித்துளி பேசுக. 

Answer: வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் : அனைவருக்கும் வணக்கம்! நான் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மதுரை. இம்மதுரை தூங்கா நகர், கோவில் நகர், தமிழர் நாகரிகத் தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்சு, தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் சிறப்பிக்கப் பெறுகிறது. மதுரை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது மீனாட்சியம்மன் கோவில். இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் எனக் காட்சிப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மதுரை நகரின் நடுவில் அமைந்து மதுரைக்கே அழகூட்டுகிறது. இராமர், லட்சுமணர், இந்திரன், தேவர்கள் போன்றவர்களால் வழிபடப்பட்ட பெருமைக்குரியது. மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பகுளம் உள்ளது. இக்குளத்திலிருந்து திருமலை நாயக்கர் மகாலுக்குச் செல்வதற்குச் சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 திருமலை நாயக்கர் மகால் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இது கலைநயத்தில் ‘தாஜ்மகால்’ போன்றது. அந்த மகாலில் மிகச்சிறந்த ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அமைந்துள்ள தூணின் உயரம் 82 அடி, சுற்றளவு 19 அடி ஆகும். அடுத்ததாக நாங்கள் பார்த்தது காந்தி மியூசியம். இவ்விடம் இராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த இடம் ஆகும். இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய ஆடைகள், கடைசியாக அவர் அணிந்திருந்த உடை ஆகியவை இடம்பெற்றுள்ளன. நல்ல நூலகம் ஒன்றும் அமைந்துள்ளது. மதுரைக்கு அருகே திருப்பரங்குன்றம் சென்றோம். இது ஒரு குகைக் கோவில். ஒரே கல்லில் குடைந்த கோவில் ஆகும். மதுரையில் இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. 

 2. நற்பண்புகள் கொண்ட சான்றோர் ஒருவரைப்பற்றி 5 மணித்துளி பேசுக.

 Answer: அனைவருக்கும் காலை வணக்கம்! நான் பாலம் என்ற அமைப்பை நடத்திவரும் ‘பாலம் கல்யாணசுந்தரம்’ அவர்களைப் பற்றிக் கூறவிருக்கிறேன். இவர் திருநெல்வேலி மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940ஆம் ஆண்டில் பிறந்தவர். தமிழ்மீது பற்றுக் கொண்டவர். கல்லூரியில் வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினாலும் அவர் தமிழையே படித்தவர். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காகச் செலவிட்டுத் தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் உணவு பரிமாறுபவராக வேலை பார்த்தவர். அவர் ஈட்டிய மொத்த வருவாயைக் கொடுத்து வரலாறு படைத்தவர். இவரைப் போன்று உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த எவரும் செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 6.5 மில்லியன் டாலர் (இந்தியப் பணம் 30 கோடி) பரிசாகப் பெற்றவர். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியவர். 

  குடும்பப்பங்காகக் கிடைத்த ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்தைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து மகிழ்வுற்றவர். ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்து கொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதைவாசியாக வாழ்ந்தவர். தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் அவரைப் போற்றுவோம். அவரைப் போல நாமும் நற்பண்புகளுடன் வாழ்வோம் என்று உறுதியேற்போம்.

 இ. படித்தல் : 

1. திருக்குறளைப் பொருள் விளங்கப் படித்துக்காட்டுக. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே திருக்குறளைப் பொருள் விளங்கப் படிக்க வேண்டும். 

 2. புத்தகப் பூங்கொத்தில் விளையாட்டுகள் தொடர்பான கதைகளைப் படித்துக் காட்டுக 

Answer: மாணவர்கள் தாங்களாகவே புத்தகப் பூங்கொத்தில் விளையாட்டுகள் தொடர்பான கதைகளை படிக்க வேண்டும். 

  ஈ. எழுதுதல். 

 1. சொல்லக் கேட்டு எழுதுக. 

Answer: பண்பு உடையவராக வாழ்தல் நல்வழியாகும். திருக்குறள் “உலகப்பொதுமறை” என்றழைக்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் உலகப் பாரம்பரியச் சின்னமாகும். 

 2. தொடரில் அமைத்து எழுதுக. 

1. வெற்றி – …………………………………. 

2. நாகரிகம் – …………………………………. 

3. உழவுத்தொழில் – …………………………………. 

4. கலையழகு – …………………………………. 

Answer: வெற்றி – குமரன் மல்யுத்த போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி வாகை சூடினான். நாகரிகம் – தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு. உழவுத்தொழில் – கண்ணன் தன் விடாமுயற்சியால் உழவுத்தொழிலில் வளம் பெருக்கினான். கலையழகு – கண்ணன் வரைந்த ஓவியம் கலையழகின் மொத்த உருவமாகும்.

 3. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 

அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத்திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான். புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப்பெற்றான். நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை. போர்க்களத்தில் வீறுகொண்டு செம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப்படையே ஆகும். வலிமை சான்ற அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப்பதவிக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 1. நால்வகைப் படைகள் யாவை? 

Answer: தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை. 

2. நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது எது?

 Answer: நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை. 

  3. மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது? 

Answer: மாற்றார் என்னும் சொல்லின் பொருள் பகைநாட்டரசர் (பகைவர்). 

 4. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக. 

Answer: உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும். 

 5. காலாட்படை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக. 

Answer: கால் + ஆள் + படை. 

 4. கோடிட்ட இடத்தை நிரப்புக. 

 1. மக்களுக்கு உரிய பண்பில்லாதவர் ……………….. போன்றவர் என வள்ளுவர் கூறுகிறார். 

2. கங்கை கொண்ட சோழபுரம் ……………….. என்று புலவர்களால் போற்றப்பட்டது. 

3. கம்பைக் குறிக்கும் வீரக்கலை ……………….. ஆகும்.

 Answer: 1. மரத்தைப் 2. கங்காபுரி 3. சிலம்பாட்டம் 

5. பிறமொழிச் சொற்களையும் பேச்சுத்தமிழையும் நீக்கிச் சரியாக எழுதுக.

 1. டூமாரோ ஈவினிங் என் ஸிஸ்டர் ஊருக்குப் போவா. 

Answer: நாளை மாலை என் தங்கை ஊருக்குச் செல்வாள். 

 2. ஷேர் ஆட்டோவில் பைவ் பாசஞ்சர்ஸ் இருக்காங்க. 

Answer: பகிர் தானியங்கியில் ஐந்து பயணிகள் இருக்கிறார்கள்.

 3. என் வீட்டில் வாசிங் மிஷின் ரிப்பேராக இருக்கு.

 Answer: என் வீட்டில் சலவை இயந்திரம் பழுதாகி இருக்கிறது. 

 6. பொருத்துக.


7. பாடலை நிறைவு செய்க. 


 8. கீழ்க்காணும் குறட்பாக்களிலுள்ள சொற்களைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக. 

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் 
பண்புபா ராட்டும் உலகு. 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
 பண்புஉடைமை என்னும் வழக்கு.


மொழியோடு விளையாடு

 1. சுழலட்டையைப் பயன்படுத்திக் குறிப்புகளுக்கு விடை எழுதுக


2. நீக்குவோம்! சேர்ப்போம்!



PREPARED BY THULIRKALVI TEAM 



 

No comments:

Post a Comment