5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - சமூக அறிவியல் - பாடம் 3 - உலகில் உள்ள கண்டங்கள் - புத்தக வினா விடைகள் - EDUNTZ

Latest

Search here!

Friday, 21 October 2022

5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - சமூக அறிவியல் - பாடம் 3 - உலகில் உள்ள கண்டங்கள் - புத்தக வினா விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM 

 சமூக அறிவியல் 
பாடம் 3
உலகில் உள்ள கண்டங்கள் 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. 

 1. உலகில் ______________ கண்டங்கள் உள்ளன. 

அ) ஐந்து ஆ) ஏழு இ) ஒன்பது 

விடை: ஆ) ஏழு 

2. மிகப்பெரிய கண்டம் ______________ 

அ) ஆப்பிரிக்கா ஆ) ஆசியா இ) வட அமெரிக்கா 

விடை:ஆ) ஆசியா 

  3. உலகின் நீளமான நதி ______________ 

அ) காவிரி ஆ) கங்கை இ) நைல் 

விடை:இ) நைல்

 4. சுப்பீரியர் ஏரி (Lake Superior) அமைந்துள்ள இடம் _____________ 

அ) வட அமெரிக்கா ஆ) ஆஸ்திரேலியா இ) ஐரோப்பா 

விடை:அ) வட அமெரிக்கா 

 5. பென்குவின்கள் காணப்படும் இடம் ______________ 

அ) ஆசியா ஆ) அண்டார்டிகா இ) ஆப்பிரிக்கா 

விடை: ஆ) அண்டார்டிகா

 II. பொருத்துக. 

III. சரியா | தவறா எழுதுக. 

1. ஆசியா உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும். 

விடை: தவறு

 2. உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று இந்தியாவில் உள்ளது.

விடை: சரி 

  3. பிரேசில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்று. 

விடை: சரி 

  4. பெருந் தடுப்புப் பவளப்பாறை இந்தியாவில் உள்ளது. 

விடை: தவறு

 5. அண்டார்டிகாவில் அரைவருடம் சூரிய ஒளி காணப்படும். 

விடை: சரி

 IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க. 

 1. கண்டங்களின் பெயர்களை எழுதவும். 

  •  ஆசியா 
  • ஆப்பிரிக்கா 
  • வட அமெரிக்கா
  •  தென் அமெரிக்கா 
  • அண்டார்டிகா 
  • ஐரோப்பா 
  • ஆஸ்திரேலியா

2. தாஜ்மஹால் எங்கு அமைந்துள்ளது?

 விடை: தாஜ்மஹால் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

  3. வட அமெரிக்காவின் சிறப்பு அம்சங்களைப் பற்றி எழுதுக. 

விடை: வட அமெரிக்கா முழுவதும் வட கோளத்தில் உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து வட அமெரிக்கா மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரி இக்கண்டத்தில்தான் உள்ளது. மிசிசிப்பி – மிசௌரி நதி வட அமெரிக்காவில் நீளமான நதிகளுள் ஒன்று. அமெரிக்க ஐக்கிய நாடுகள் வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும். 

  4. பெருந்தடுப்புப் பவளப்பாறை எங்கு அமைந்துள்ளது? 

விடை: பெருந்தடுப்புப் பவளப்பாறைத் திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. இது ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம். 

5. எக்கண்டம் உறை பனிக் கண்டம் என்று 

விடை: அழைக்கப்படுகிறது? அண்டார்டிகா, பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் ஆகும். இக்கண்டம் வெள்ளைக்கண்டம் அல்லது உறைந்த கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. 

 V. விரிவாக விடையளிக்க. 

 1. ஏதேனும் இரு கண்டங்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக. 

விடை: ஆசியா : உலகத்திலுள்ள கண்டங்களுள் ஆசியாதான் மிகப்பெரிய நிலப்பரப்பினையும், மிகுந்த மக்கள் தொகையினையும் கொண்டுள்ள கண்டமாகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஆசியாவில்தான் உள்ளன. பூமியின் மிக உயர்ந்த இடமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஆசியாவில்தான் உள்ளது. பண்டைய நாகரிகங்களான சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா – நாகரிகம் போன்றவை ஆசியாவில் தான் தோன்றியுள்ளன. ஐரோப்பா : ஐரோப்பாவும், ஆசியாவும் பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாக உள்ளன. யூரல் மலைத்தொடர்களும், காஸ்பியன் கடலும் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைப் பிரிக்கின்றன. உலகின் மிகச் சிறிய நகரமான வாடிகன் நகரம் ஐரோப்பாவில்தான் உள்ளது. வோல்கா நதி ஐரோப்பாவின் மிக நீளமான நதிகளுள் ஒன்று ஆகும். 

 2. இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் பற்றி எழுதுக. 

விடை: இந்தியாவில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. தாஜ்மஹால் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹால் வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அழகான நினைவுச் சின்னமானது உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மேலும் சில வரலாற்று நினைவுச் சின்னங்களாவன, புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயில், மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில், போபால் அருகே உள்ள சாஞ்சி ஸ்தூபி, தமிழ்நாட்டில் உள்ள புனித ஜார்ஜ்கோட்டை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம். 

 3. ஆஸ்திரேலியாவைப் பற்றி விரிவாக எழுதவும். 

விடை: ஆஸ்திரேலியா, ஒரு தீவுக் கண்டமாகும். இது தனித்துவம் பெற்ற இயற்கைக் காட்சிகளும் இயற்கை அதிசயங்களும் கொண்ட கண்டமாகும். பெருந் தடுப்புப் பவளப்பாறைத்திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம். ஆஸ்திரேலிய டாஸ்மேனியா மற்றும் பல தீவுகளை உள்ளடக்கியது. 

  பக்கம் 132 

செயல்பாடு 

 நாட்டின் பெயர் மற்றும் அது எக்கண்டத்தில் இடம் பெற்றுள்ளது என்பதனைக் கீழுள்ள அட்டவணையில் எழுதுக.


PREPARED BY THULIRKALVI TEAM 

No comments:

Post a Comment