5-ஆம் வகுப்பு - அறிவியல் - இரண்டாம் பருவம் - 3 தாவரங்கள் - வினா விடைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 21 October 2022

5-ஆம் வகுப்பு - அறிவியல் - இரண்டாம் பருவம் - 3 தாவரங்கள் - வினா விடைகள்


PREPARED BY THULIRKALVI TEAM 

 அறிவியல்
3 தாவரங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 

 1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு

அ) அல்லி இதழ் ஆ) புல்லி இதழ் இ) மகரந்தகம் ஈ) சூலகம் 

விடை: இ) மகரந்தகம் 

  2. காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு _____________ என்று பெயர். 

அ) அனிமோஃபிலி ஆ) ஹைட்ரோஃபிலி இ) எண்டோமோஃபிலி ஈ) ஆர்னிதோஃபிலி

 விடை: அ) அனிமோஃபிலி

  3. நீர் மூலம் விதை பரவும் முறைக்கு ______________ என்று பெயர். 

அ) அனிமோகோரி ஆ) ஹைட்ரோகோரி இ) ஸூகோரி ஈ) ஆட்டோகோரி

 விடை: ஆ) ஹைட்ரோகோரி

4. எண்டோமோஃபிலி என்பது 

அ) பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை ஆ) காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை இ) நீர் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை ஈ) விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை 

விடை: அ) பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை 

  5. எதில் காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது? 

அ) புல் ஆ) வாலிஸ்னேரியா இ) ஹைட்ரில்லா ஈ) தாமரை 

விடை: அ) புல்

 II. கோடிட்ட இடத்தை நிரப்புக. 

 1. விதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவுவதற்கு ______________ என்று பெயர். 

விடை: விதை பரவுதல்

 2. தாவர விதை வெடித்துப் பரவுவதற்கு ________________ என்று பெயர். 

விடை: சுயவழியில் விதைபரவுதல் 

  3. விதையானது கருத்தரித்த ___________ ஆகும். 

விடை: சூல் 

  4. நெல்லானது ___________ மண்ணில் நன்கு வளரும். 

விடை: களி

 5. பெரிய அளவு மண் துகள்களைக் கொண்டது _____________ ஆகும்.

 விடை: மணல்

 III. பொருத்துக.

 1. மண்புழு – கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழிக்கின்றது. 

2. பறவைகள் – தேன் 

3. தேங்காய் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை 

4. தேனீக்கள் – நீரின் மூலம் பரவுதல் 

5. தட்டான் – மண்புழு உரமாதல் 

விடை: 

1. மண்புழு – மண்புழு உரமாதல்

 2. பறவைகள் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை 

3. தேங்காய் – நீரின் மூலம் பரவுதல் 

4. தேனீக்கள் – தேன்

 5. தட்டான் – கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழிக்கின்றது 

 IV. சுருக்கமாக விடையளி. 

 1. மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?

விடை: மகரந்தத்தூளானது மகரந்தத்தாள் முடியிலிருந்து சூலக முடியைச் சென்றடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும். 

 2. விதை முளைத்தல் என்றால் என்ன? 

விடை: விதையானது ஒரு கருவுற்ற சூல் ஆகும். இதில் முளைக்கரு மற்றும் உணவுப் பொருள்கள் விதை உறையால் பாதுகாக்கப்பட்டிருக்கும். சாதமான சூழ்நிலை வரும்போது, விதை முளைத்து ஒரு புதிய செடியாக வளரும். 

 3. மண் எவ்வாறு உருவாகிறது? 

விடை: பாறை, காற்று, மழை மற்றும் தட்பவெப்பநிலை ஆகியவற்றின் செயல்பாட்டினால் பாறைகள் உடைக்கப்படும்போது மண் உருவாகிறது. 

 4. மண்புழு உரம் என்றால் என்ன? 

விடை: மக்கும் கழிவுப் பொருள்களை மண்புழுக்கள் உரமாக மாற்றும் நிகழ்விற்கு மண்புழு உரமாக்கல் என்று பெயர். 

 5. விதைகள் எவ்வாறு நீர் மூலம் பரவுகின்றன?

 விடை: நீர் மூலம் பரவும் கனிகள் மிதந்து செல்வதற்கு ஏற்ற வெளியுறையைக் கொண்டுள்ளன. தேங்காயின் இடை அடுக்காது நாரினால் அமைந்துள்ளதால் அது எளிதில் – நீரினால் அடித்துச் செல்லப்படுகிறது. அது பல்வேறு இடங்களைச் சென்றடைந்து புதிய தாவரமாக வளர்கின்றது. எ.கா : தாமரை, தேங்காய் 

 V. விரிவாக விடையளி. 

 1. தாவர பாகங்கள் பற்றி குறிப்பெழுதுக?

விடை: 


ஒரு தாவரம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. தரைக்கு மேலே வெளியே தெரியும் தாவரப் பகுதி தண்டுத் தொகுதி எனப்படுகிறது. தரைக்குக் கீழே உள்ள தாவரத்தின் பகுதி வேர்த் தொகுதி எனப்படும். தண்டுத் தொகுதியில் தண்டு, இலைகள், கிளைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவை காணப்படுகின்றன. வேர்த் தொகுதியில் ஆணி வேர், பக்க வேர் போன்ற வேர்கள் காணப்படுகின்றன. இரு வித்தலைத் தாவரங்களுக்கு நீளமான ஆணிவேர் உண்டு. ஒரு வித்திலைத் தாவரங்களுக்கு சல்லி வேர்கள் உண்டு.

2. மகரந்தச்சேர்க்கையின் முறைகளை விவரி.

 விடை:



மகரந்தத்தூளானது ஒரு மலரின் மகரந்ததாள் முடியிலிருந்து அதே மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும். மகரந்தத்தூளானது ஒரு மலரின் மகரந்த்தாள் முடியிலிருந்து அதே வகைத் தாவரத்தின் வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

தன் மகரந்தச் சேர்க்கையில் விதைகள் வீரியமற்ற . தாவரங்களை உருவாக்குகின்றன. அவை புதுவகைத் தாவரங்களை உருவாக்கமுடியாது. ஆனால், அயல்மகரந்தச் சேர்க்கையில் விதைகள் தரமான தாவரங்களை உருவாக்குகின்றன. மேலும், புதுவகைத் தாவரங்கள் அதிலிருந்து உருவாகின்றன. மகரந்தச் சேர்க்கை பலவிதங்களில் நடைபெறுகிறது.இம்முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.


காற்று மூலம் மகரந்தச்சேர்க்கை (அனிமோஃபிலி) 

காற்றுமூலம் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் அளவில் சிறியதாக உள்ளன. அவை வண்ணமயமான நிறம், வாசனை மற்றும் மகரந்தத் தேன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதில்லை.இவற்றின் மகரந்தத் தூள்கள் ஒட்டும் தன்மையற்ற, காய்ந்த , இலேசான பொடி போன்று காணப்படும். எனவே, இவை , எளிதில் காற்றில் எடுத்துச் செல்லப்படுகின்றன. 

எ.கா: புல், சோளம், பைன்

 நீர் மூலம் மகரந்தச்சேர்க்கை (ஹைட்ரோஃபிலி)

 நீர்த்தாவரங்களின் மலர்கள் நிறமற்றவை. அவற்றில் மகரந்தத் தேன் காணப்படுவதில்லை. அவற்றின் மகரந்த தூள் – ஈரமடையாத வகையில் அவை ஒருவகை பிசினால் மூடப் பட்டுள்ளன.

 எ.கா:வாலிஸ்னேரியா, ஹைட்ரில்லா, சோஸ்டேரியா


பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை (எண்டோமோஃபிலி) 

இது சூரியகாந்தி, வெண்டை , கத்தரி மற்றும் பூசணி போன்றவற்றில் நடைபெறும் பொதுவான மகரந்தசேர்க்கை – முறை ஆகும். ஒருசில மலர்கள் அளவில் பெரிதாகவும், இனிய நறுமணம் உடையவையாகவும் காணப்படுகின்றன. இவை ) வண்ணத்துப்பூச்சி மற்றும் தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களைக் கவர்கின்றன. 


 3. மலரின் படம் வரைந்து அதன் பாகங்களைக் குறிக்கவும். 

விடை:


PREPARED BY THULIRKALVI TEAM 

No comments:

Post a Comment