கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும்
அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு சென்றடைகிறதா?
ஆய்வு நடத்த அதிகாரிகள் குழு அமைப்பு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாகவும், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டும், மண்டல வாரியான ஆய்வு கூட்டங்கள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி, சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆய்வு நடத்த துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் இணை இயக்குனர் நிலையில் உள்ள அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 2 நாட்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் களப்பணி ஆய்வு நடத்த உள்ளது.
அவ்வாறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட நிலைகள், ஆக்கப்பூர்வமான கருத்துகளை சம்பந்தப்பட்ட குழுவினர் 2-வது நாள் இறுதியில் நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தொடர்புடைய களஅலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இதுபோல், தமிழகத்தின் பிற கல்வி மண்டலங்களிலும் விரைவில் நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment