‘மண் பானை’ தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது எப்படி? - EDUNTZ

Latest

Search Here!

Friday, 14 October 2022

‘மண் பானை’ தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது எப்படி?

# தெரியுமா..? ‘மண் பானை’ தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது எப்படி? 


மண்பானை ‘கூலிங் எனர்ஜி’ ரொம்பவே சிம்பிள்தான். மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருப்பது ேபான்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். 
 மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி தண்ணீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே குளிர்ந்த நிலையிலேயே நீர் இருக்கிறது. வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், தண்ணீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது. 

ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது. பனிக் காலத்திலும், காற்று வீசும் காலத்திலும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் தண்ணீர் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது. 
ஆனால், இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது. ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும் 5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும். 

வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், தண்ணீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும்.

No comments:

Post a Comment