அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு! - EDUNTZ

Latest

Search here!

Thursday, 6 October 2022

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

அரசாணை (நிலை) எண்.164 சுருக்கம் தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் L.K.G மற்றும் U.K.G வகுப்புகள் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

பள்ளிக் கல்வி (தொ.க.2(2))த் துறை 2. தொடக்கக் SIR TIM படிக்கப்பட்டவை;- 1 அரசாணை (நிலை) எண்.89, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (எஸ்.டபிள்யு-7(1)த்துறை, நாள்.11.12.2018. கல்வி இயக்குநரின் ந.க. எண்.011899/கே3/2022, நாள்:14.06.2022. நாள்.29.09.2022 திருவள்ளுவராண்டு-2053 சுபகிருது வருடம், புரட்டாசி 12 . 

ஆணை: மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின்படி அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் L.K.G மற்றும் U.K.G வகுப்புகள் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2. அரசு 1 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LK.G மற்றும் U.K.G வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் எனவும், அந்த பள்ளிகளுக்கு தேவையான சிறப்பு ஆசிரியர்கள் தேவையை முன்னுரிமையாக கொண்டு தற்காலிக சிறப்பாசிரியர்களை நியமிக்கவும், அவர்களை தெரிவு செய்யப்படும் முறை மற்றும் அவர்களுக்கான பணிகளை தொடக்கக் கல்வி இயக்குநர் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்காலிக ஆசிரியர்களை தெரிவு செய்யப்படும் முறை மற்றும் அவர்களுக்கான பணிகள்:- இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம். இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது என்பதனை தெரியப் படுத்திடலாம். SEE ORDER👇

    

No comments:

Post a Comment