:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, குடிமை பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு, இலவச பயிற்சி பெற விரும்புவோருக்கு, நவ.,13ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும், இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு இணையதளம் வழியாக, 7,077 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு, தமிழகத்தில் உள்ள 17 மையங்களில், நவ., 13ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை, பயிற்சி மையத்தின், www.civilservicecoaching.com என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்வில், 150 கொள்குறி வினாக்களுக்கு, விடை அளிக்க வேண்டும். நவ., 13ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடக்கும். அவ்வப்போது அறிவிக்கப்படும் விபரங்களை, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 044 - 2462 1475, 94442 86657 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்
No comments:
Post a Comment