Photo by Yan Krukov: https://www.pexels.com/photo/active-children-doing-balancing-exercises-8613312/
எப்போதும் ஒரே மாதிரியான ‘ஒர்க் அவுட்' செய்யும்போது சலிப்படையாமல் இருக்க புதிது புதிதாய் சில ‘ஒர்க்-அவுட்’ ஆப்ஸ்களும் வந்திருக்கின்றன. இவற்றை ‘டவுன்லோட்' செய்து வைத்துக் கொண்டால், பயிற்சிகளை சலிப்படையாமல் செய்யலாம். அதில் சில...
* 8 பிட் (8 fit)
‘8 பிட்’ ஆப் தேவைக்கேற்ப உடற்பயிற்சிகளையும், உணவுத் திட்டத்தையும் ஒன்றாக இணைத்துக் கொடுக்கிறது. இது நிறைய வழிகாட்டுதல், பரிந்துரைகள், நினைவூட்டல்கள் மற்றும் வழிமுறைகளை விரும்பும் நபர்களுக்கான சிறந்த ஒன்று.
உடல் எடையை குறைப்பது, உடலை ‘பிட்’டாக வைத்துக் கொள்வது அல்லது தசையை வலுவாக்குவது என இதில் எது உங்களுக்கு தேவையோ அதற்கேற்றவாறு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பிய உடலமைப்பை பெறும் வகையில், உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிக்கான தனிப்பட்ட திட்டமிடுதலையும் உருவாக்கி தருகிறது.
* பிலோகில்லேட்ஸ் (Blogilates)
அழகான மற்றும் சுறுசுறுப்பான தோற்றம் தனக்கு வேண்டும் என்று நினைப்பவராக இருந்தால், இந்த ஆப் உங்களுக்கானது. ஆப் மட்டுமின்றி, ப்ளாக் மற்றும் யூ-டியூப்பிலும் பார்க்க முடியும். ஏராளமான உடற்பயிற்சி பரிந்துரைகள், சமையல் குறிப்புகள் மற்றும் சரியான உடலமைப்புக்கான அளவுகள் போன்றவை இதில் கொட்டிக்கிடக்கின்றன.
* பிட் ரேடியோ (Fit Radio)
பிட் ரேடியோ, உடற்பயிற்சிகளுக்கான வழிகாட்டல்களோடு இணைந்த ‘மியூசிக்’ பிளே-லிஸ்ட்டுகளை கொண்டுள்ளது. டி.ஜேக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஒர்க்-அவுட்’ பாடல்கள் அல்லது உங்கள் டிரெட்மில்லின் வேகத்தை அதிகரிக்கச் சொல்லும் உத்வேக குரல் உங்கள் காதில் ஒலிக்க வேண்டுமா?, பிட் ரேடியோவை நீங்கள் நிச்சயம் தேர்ந்தெடுக்கலாம். பயிற்சியின்போது உங்கள் வேகம் மற்றும் மனநிலையுடன் பொருந்தக்கூடிய அந்தந்த ஒர்க் அவுட்டுக்கு ஏற்ற இசையைக் கேட்டு ரசிக்கலாம்.
* பிட்பிட் கோச் (Fitbit Coach)
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யக்கூடிய ‘ஒர்க் அவுட்’ வீடியோக்களை பின்தொடர பிட்பிட் கோச் ஆப்ஸ்-ஐ பயன்படுத்தலாம். ஸ்ட்ரெட்சிங், படிக்கட்டுகளில் செய்யும் ஒர்க் அவுட்ஸ் என அனைத்து வகையான பயிற்சிகளையும் வீடியோவாக பெற முடியும். பயிற்சியாளர் நேரடியாக தங்களுக்கு வழிகாட்டுவதை விரும்புவோருக்கான சிறந்த ஆப் இது.
* ஜே & ஜே அபிசியல் (J&J Official 7 Minute workout)
இது ஒரு சுழற்சிமுறை பயிற்சி ஆப். அதாவது அன்றைய நாளில் சில உடற்பயிற்சிகளை உங்களுக்கு ஏற்றவாறு தீவிரப்படுத்தியும், வேகத்தை குறைத்தும் மாற்றி செய்யக்கூடிய (High Intensity Interval Training) பயிற்சியாகும். இப்பயிற்சியை செய்ய உங்களுக்கு தேவையானது ஒரு நாற்காலியும், 7 நிமிடங்கள் அவகாசமும் மட்டுமே.
வழக்கமான 7 நிமிட ஒர்க் அவுட்டை போல அல்லாமல் இந்த ஆப்பில் முதலில் மிதமான வேகம், இடையில் 16 நிமிடம் ஓய்வு பின்னர் தீவிர வேகம் என்னும் நிலையில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான காலத்தை விட இன்னும் அதிவேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும்.
* மேப் மை பிட்னஸ் (Map my fitness)
உடற்பயிற்சியை புதிதாக கற்றுக் கொள்ள ஆரம்பிப்பவர்களுக்கும் அல்லது உடற்பயிற்சியை நீண்ட காலம் தொடர விரும்புபவர்களுக்கும் இது சரியான ஒன்றாகும். பக்கத்தில் உள்ள கடைக்கு செல்வது முதல் வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சிகள் வரை ஒரு நாளில் உங்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் ‘லைவ்வாக' பதிவு செய்து கொள்ள முடியும். ஒருவேளை ‘லைவ்வாக’ செயல்பாட்டை கண்காணிக்க விரும்பவில்லை என்றால் உங்கள் உடற்பயிற்சி செயல்பாடுகளை மட்டும் ‘மேன்யுவலாக' பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment