சி.இ.ஓ., அலுவலகங்களில் துணை ஆய்வாளர்கள் நியமனம்
தமிழகத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் (சி.இ.ஓ.,) புதிதாக துணை ஆய்வாளர் (டி.ஐ.,) நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) பணியிடங்கள் ரத்து செய்யப்படவுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் (டி.இ.ஓ.,) தோறும் டி.ஐ.,க்கள் உள்ளனர். இவர்கள் டி.இ.ஓ.,க்களுக்கு துணையாக பள்ளி ஆய்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். தற்போது நிர்வாக சீரமைப்பில் டி.ஐ.,க்களுக்கு பணிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்களில் இருந்த இந்த பணியிடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்டங்களில் சி.இ.ஓ.,விற்கு கீழ் மேல்நிலை, உயர்நிலை தலைமையாசிரியர் அந்தஸ்தில் இரண்டு நேர்முக உதவியாளர்கள் உள்ளனர். இப்போது சி.இ.ஓ.,விற்கு உதவியாக டி.ஐ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பி.ஏ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "சி.இ.ஓ.,க்களின் பி.ஏ.,க்கள் தலைமையாசிரியர் அந்தஸ்தில் உள்ளதால் நிர்வாக ரீதியாக சில பணிகள் மேற்கொள்ள உத்தரவிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. பள்ளிகளுக்கும் தலைமையாசிரியர் தேவையாக உள்ளனர்.
எனவே அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்ப கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே தான் பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் அந்தஸ்தில் டி.ஐ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கல்வித்துறை எடுக்கும் முடிவே இறுதி" என்றனர்.
No comments:
Post a Comment