இன்றைய 10 சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்) - EDUNTZ

Latest

Search here!

Sunday 11 December 2022

இன்றைய 10 சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)

🌸இன்றைய 10 சொற்கள்🌸 

 1. Attentive (அட்டென்டிவ்) - கவனமுள்ள. ராஜா அவருடைய வேலைகளில் மிகவும் கவனமுள்ள நபர் ஆவார். Raja is a very attentive person in his works. 

 2. Bluff (பிலூஃப்) - வீண் பேச்சு. இந்த சலுகையானது ஒரு வீண் பேச்சு என பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. This offer was denounced as a bluff. 

 3. Diminish (டிமினிஸ்) - குறை. புதிய கொள்கையானது தேர்தலில் அவருடைய வெற்றி வாய்ப்பை குறைக்கும். The new policy will diminish his chance to win in the election. 

 4. Disdain (டிஸ்டைன்) - அவமதிப்பு. ராமு சந்திப்பின் போது அவருடைய பங்குதாரர்களை அவமதிப்பு செய்தான். Ramu disdained his partners at the meeting. 

 5. Flatter (ஃபிலாட்டர்) - பொய்யானப் புகழ். சீதா அலுவலகத்தில் அவரை பொய்யாக புகழ்ந்து கொண்டிருந்தாள். Seetha was flattering him at the office. 
 6. Narrate (நரேட்) - விவரி. அந்தக் கதையானது ராமுவால் விவரிக்கப்பட்டது. That story is narrated by Ramu. 

 7. Versatile (வேர்ஸடைல்) - பல துறைகளிலும் திறமையுடைய. இந்த நிறுவனத்தில் ரேவந்த் பல துறைகளில் திறமையுடைய நபர் ஆவார். Revanth is a versatile person in this company. 

 8. Replenish (ரிப்ளனிஸ்) - நிரப்பு. ரமேஷ் குவளையில் தண்ணீரை நிரப்பினார். Ramesh replenish the tumbler with water. 

 9. Sabotage (சபோடேஜ்) - நாச வேலை. பாபு நாச வேலைக்கு திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டான். Babu was arrested for planning the sabotage. 

 10. Potential (பொட்டன்சியல்) - ஆற்றல் வளம் மிக்க. இந்த பகுதியானது நமது தொழிலுக்கு நிறைய ஆற்றல் வளம் மிக்கதாக உள்ளது. This area has lot of potential for our business. 


No comments:

Post a Comment