அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் DSE PROCEEDINGS - EDUNTZ

Latest

Search here!

Monday, 24 April 2023

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் DSE PROCEEDINGS

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.043443/பிடி1/இ2/2023, நாள்.21.04.2023 

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 28.04.2023 அன்று நடைபெறுதல் - ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள தகவல் தெரிவித்தல் - சார்பு. பொருள்- 

பார்வை- தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 043443/பிடி1/இ2/2022, நாள்.23.03.2023. 
*** 
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 28.04.2023 அன்று காலை 09.00 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் தங்களது மடிக் கணினியுடன் (Laptop) கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளிக்கல்வி ஆணையருக்காக 

பெறுநர்- 

1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) (முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக) 
நகல்- 

1. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை-9. 
2. அரசுமுதன்மைச் செயலாளர், தலைமைச் செயலகம், சென்னை-9. 
3. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை-6. 
4. சிறப்புப் பணி அலுவலர், இல்லம் தேடிக் கல்வி, சென்னை-6. 
5. உறுப்பினர் செயலர், மாதிரிப் பள்ளிகள், சென்னை-6 
6. இயக்குநர், பொது நூலுக இயக்ககம், சென்னை. தகவலுக்காக அனுப்பலாகிறது. 
7. அனைத்து இயக்குநர்கள். (தகவலுக்காக அனுப்பப்படுகிறது) 
8. முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை-85. (கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை செய்ய தெரிவிக்கப்படுகிறது).


No comments:

Post a Comment