2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 29 May 2023

2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள், சென்னை-6.  பள்ளிக்கல்வி  ந.க.எண். 019528/எம்/இ1/2023, நாள். 25.05.2023. 


பொருள்: 

2023-2024ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இந்தக் கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. 

பார்வை:

1. அரசாணை (நிலை) எண். 163/பள்ளிக் கல்வி (ERT)த் துறை, நாள்.10.07.2017 
2. பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குரின் செயல்முறைகள் ந.க.எண். 019528/எம்/இ1/2022. நாள். 11.06.2022. 
3. தொடக்க பள்ளித் தூய்மை கல்வி இயக்குரின் நேர்முக கடித எண்.007351/ஜெ2/2021 நாள்.08.10.2021 ** 

2023-2024ம் கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து கீழ்காணும் அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

பள்ளித்தூய்மை

புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். திறந்த வெளிக் கிணறுகள் இருப்பின் அதை மூடிட நடவடிக்கை எடுத்து. பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே மூடப்பட வேண்டும். கழிவு நீர்த் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பொருட்கள் இருப்பின் அப்புறப்படுத்துதல் அவசியம். விதிகளின்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். ஆய்வங்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட வேண்டும். பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். © பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாதவாறும், மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றி தூய்மை செய்யப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி வாளகத்தில் உள்ள அனைத்தும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். 

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் 

ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர். மாணவர் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் சோப்பு அல்லது சோப்புக் கரைசல் திரவம் வைக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் மின் சுவிட்ச்கள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்திடல் வேண்டும். 

பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின் மாணவர்கள் அங்கு செல்லாத வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். @ பள்ளி வளாகத்தில் மரங்கள் ஏதேனும் இருந்து அதனுடைய வேர்கள் வெளியில் தெரியும் வகையில் இருந்தால் அதனை மண் கொண்டு மூடுதல் வேண்டும். குழந்தைகள் விளையாடும் போது தடுக்கி விழாவண்ணம் ஏற்பாடுகள் செய்தல் அவசியமாகும். 

மாணவர் சேர்க்கை 

மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பள்ளி திறந்த நாள் முதலே நடத்தப்பட வேண்டும். குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை தீவிரமாக நடத்த ஆசிரியர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்திடல் அவசியம். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்கள் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட வேண்டும். முதல் பருவத்திற்கு வழங்கப்பட வேண்டிய நோட்டுப்புத்தங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சீருடைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் பள்ளி திறக்கும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி குறித்த நேரத்திற்கு வழங்கப்படுவதை தொடக்கப்பள்ளி தமைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கென கற்றல் கற்பித்தல் முறைகளில் நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களான எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, மாதிரிப் பள்ளிகள் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி  சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, கல்வி இணைச் செயல்பாடுகள் (Co-Curricular) மற்றும் கல்விசாரா செயல்பாடுகளை (Extra-Curricular) சிறப்பாகச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது. பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய / மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஆண்டும் இந்த செயல்பாடுகளில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த கல்வியாண்டிலும் இதில் எவ்வித தொய்வுமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாறி வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தொழில் நுட்ப அறிவு மற்றும் கணிணி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எதிர்காலத் தொழில் நுட்பமான எந்திரனியலைக் கற்றுக்கொள்ள எந்திரனியல் மன்றங்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இணைய பாதுகாப்பு மற்றும் Ethical Hacking தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டு தோறும் மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இயற்கையின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் அப்பள்ளிகளின் சத்துணவில் பயன்படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் சுற்றுச்சூழல் மன்றம் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒவ்வொருமாதமும் பள்ளிக்கு அழைத்து மாணவர்களின்உடல்நலம், கற்றல் அடைவு, இணைச் செயல்பாடுகளான விளையாட்டு. பங்கேற்பு செயல்பாடுகளில் வாசிப்புத்திறன், மன்றச் உள்ளிட்ட பள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டு, கல்விசார் செயல்பாடுகளில் பெற்றோர்களின் பங்கேற்பை உறுதி செய்தல் வேண்டும். 

பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகளை ஊக்குவிக்க அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் கீழ்க்காணும் மன்றங்கள் ! சங்கங்கள் / கலைச் செயல்பாடுகள் போன்றவற்றில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சுற்றுச்சூழல் மன்றம், வினாடி வினா மன்றம், தொன்மைப் பாதுகாப்பு மன்றம், நுகர்வோர் மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம், வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மன்றம், நுண்கலை மன்றம், திரைப்பட மன்றம், சாரண சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டுநலப் பணித்திட்டம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம். இவை தவிர பல்வேறு பள்ளிகள் பல்வேறு மன்றங்களை நடத்தி வருகின்றன. அவற்றையும் மன்றச் செயல்பாடுகளுக்கென எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் கலைச் செயல்பாடுகளுக்கென (Art and Culture) இரு பாடவேளைகளும், மன்றச் செயல்பாடுகளுக்கென (Club Activities) இரு பாடவேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இச்செயல்பாடுகள் பள்ளி வேலை நேரத்தில் அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன: 

கல்வி இணைச் செயல்பாடுகள் (Co-curricular activities) 

மன்ற செயல்பாடுகளை பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக மாதிரிக் கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது (இணைப்பு 4). பள்ளிகள் தங்கள் தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் கடைசி இரு பாடவேளைகளில் இச்செயல்பாடுகளைத் திட்டமிடலாம். இச்செயல்பாடுகள் அனைத்தும் அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அவர்தம் விருப்பத்திற்கேற்ப அனைத்துச் செயல்பாடுகளிலும் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் மன்றச் செயல்பாடுகளில் சுழற்சி முறையில் ஈடுபடுத்துதல் வேண்டும். தேவைப்படின், ஒரே மன்றத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், ஒரே ஆசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட மன்றங்களுக்கும் பொறுப்பாசிரியராக்கலாம். 

இலக்கிய மன்றத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களையும், வினாடி வினா மன்றத்திற்கு கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களையும், சுற்றுச்சூழல் மன்றத்திற்கு சமூக அறிவியல் ஆசிரியரையும் வகுப்பு வாரியாக பொறுப்பாசிரியாராக நியமிக்கலாம். எனினும், ஆசிரியர்களைத் தெரிவு செய்யும்போது அவர்தம் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கேற்ப முன்னுரிமை அளித்து நியமிக்கலாம். மன்றச் செயல்பாடுகள் மற்றும் நூலக செயல்பாடுகளுக்கென ஆசிரியர்கள் செலவிடும் பாடவேளையையும் அவர்தம் பணி நேரமாகக்கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப்பகிர்வு காலஅட்டவணையை உருவாக்க வேண்டும். மன்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், மாதத்தின் முதல் வாரத்தில் இலக்கிய மன்றமும் இரண்டாவது வாரத்தில் வினாடிவினா மன்றமும் மூன்றாவது வாரத்தில் சுற்றுச்சூழல் மன்ற எடுத்துக்கொண்டு மீதமுள்ள ஒரு / இரு வாரத்திற்கு பள்ளியின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு முறையும் பக்கம் 5இல் கொடுக்கப்பட்டுள்ள பிற மன்றங்களில் ஏதேனும் ஒரு மன்ற செயல்பாட்டினை தெரிவு செய்து நடத்திக் கொள்ளலாம். செயல்பாடுகளுக்கென இலக்கிய மன்றத்தின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வாயிலாக மாணவர்களை கதை, கட்டுரை, கவிதை மற்றும் பட்டிமன்றம் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடச் செய்யலாம். 

பள்ளி அளவில் நடத்தப்படும் வினாடி வினா போட்டிகளில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய (Block) அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் இலக்கிய முகாம் மற்றும் போட்டிகளில் பங்கேற்பர். இம்முகாமில் தமிழ்நாட்டிலுள்ள தலைசிறந்த எழுத்தாளர்கள் மாணவர்களைச் சந்தித்து உரையாடுவர். இலக்கிய மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் சுமார் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் "கவிமணி விருது" வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் நடைபெறும் வினாடி வினா மன்றத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவையான பொது அறிவுப் புதிர்களை மாணவர்களே தயாரித்து வர உற்சாகப்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு போன்ற சிறார் இதழ்களிலிருந்தும் நூலகப் பாடவேளைகளில் மாணவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று படிக்கும் நூல்களிலிருந்தும் பொது அறிவு சார்ந்த வினாக்களைக் கேட்க மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். பள்ளி அளவில் 6 நடத்தப்படும் வினாடி வினா போட்டிகளில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெறும் சுமார் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் சுற்றுச்சூழல் மன்றம் / தேசிய பசுமைப்படைச் செயல்பாடுகளை இணைத்துத் திட்டமிடலாம். உலக உயிரின நிதியம் (World Wildlife Fund) மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (Tamil Nadu Pollution Control Board) இணைந்து பசுமைப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தும் பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பசுமை முதன்மையாளர் விருது (Green Champions Award) வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் நான்காவது / ஐந்தாவது வாரத்தில் பள்ளியின் விருப்பத்திற்கேற்ப பக்கம்- 5இல் கொடுக்கப்பட்டுள்ள மன்றங்களுள் ஏதேனும் ஒரு மன்ற செயல்பாட்டினை தெரிவு செய்து நடத்திக் கொள்ளலாம். இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இணையவழிக் குற்றங்களிலிருந்து மாணவர்களைத் தற்காத்துக் கொள்ளவும், பாதுகாப்பற்ற இணையதளங்களை அடையாளங்கண்டு அவற்றிலிருந்து விலகியிருக்கவும் தேவையான பயிற்சிகளை அளிக்க கணிணி நிரல் மன்றங்களையும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர எதிர்கால தொழில்நுட்பங்களுள் ஒன்றான எந்திரனியல் (Robotics) மன்றங்களையும் கணினி அறிவியல் ஆசிரியர் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் துவங்கலாம். கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எந்திரனியல் மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு மாவட்ட அளவில் உரிய பயிற்சிகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு அளிக்கப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் கணினி நிரல் / எந்திரனியல் மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் நடைபெறும் பள்ளி புத்தாக்கத் திட்டப் போட்டிகளில் (School Innovation Development Project) வெற்றி பெறும் மாணவர்களுக்கு "இளம் கண்டுபிடிப்பாளர் (Young Innovator)" விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும். 

இம்மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களில் சுமார் 10 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். கல்விசாரா செயல்பாடுகள் (Extra-curricular activities) கலைச் செயல்பாடுகளை பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக மாதிரிக் கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது (இணைப்பு-4). பள்ளிகள் தங்கள் தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கடைசி இரு பாடவேளைகளில் இச்செயல்பாடுகளைத் திட்டமிடலாம். இச்செயல்பாடுகள் அனைத்தும் அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அவர்தம் விருப்பத்திற்கேற்ப அனைத்துச் செயல்பாடுகளிலும் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் ஒவ்வொரு கலைச் செயல்பாட்டிற்கும் சுழற்சி முறையில் ஈடுபடுத்துதல் வேண்டும். தேவைப்படின், ஒரே செயல்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், ஒரே ஆசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளுக்கும் பொறுப்பாசிரியராக்கலாம். எனினும், ஆசிரியர்களைத் தெரிவு செய்யும்போது அவர்தம் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கு அளித்து நியமிக்கலாம். இச்செயல்பாடுகளுக்கென ஆசிரியர்கள் செலவிடும் பாடவேளையும் அவர்தம் முன்னுரிமை ஆசிரியர்களுக்கான பணிப்பகிர்வுக் பணி நேரமாகக்கொண்டு காலஅட்டவணையை உருவாக்க வேண்டும். கலைச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், மாதத்தின் முதல் வாரத்தில் ஓவியம் / ஓரிகாமி / கைவினைச் செயல்பாடுகளும், இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படமும். மூன்றாவது வாரத்தில் நாடகம் / கூத்துக் கலை சார்ந்த செயல்பாடுகளும், நான்காவது வாரத்தில் இசை / வாய்ப்பாட்டு / நடனம் / பாரம்பரியக் கலை சார்ந்த செயல்பாடுகளும் பள்ளியின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து நடத்திக்கொள்ளலாம். ஐந்தாவது வாரம் செயல்பாடுகள் வரும் நிலை ஏற்படின் பள்ளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மேற்கூறிய செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை தங்கள் விருப்பதிற்கேற்ப தெரிவு செய்து நடத்திக் கொள்ளலாம். ஓவிய / கைவினை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும், இவ்வாசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும் ஓவியம், ஓரிகாமி மற்றும் கைவினைக் கலைகள் தொடர்பான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். ஆசிரியர்கள் இப்பொருள் குறித்த நுணுக்கங்களை You Tube போன்ற தளத்திலோ. 

கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவோ பெற்று மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களின் படைப்புகளையும் கம்பிப் பந்தல் வாயிலாகவோ, வேறு முறைகளிலோ ஆவணப்படுத்த வேண்டும். சிறந்த படைப்புகளைத் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் இடம்பெறச் செய்ய, ஆசிரியர், தேன்சிட்டு, 8வது தளம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, பள்ளிக் கல்வி அலுவலக வளாகம், நுங்கம்பாக்கம் சென்னை-6" என்ற வைக்கவேண்டும். முகவரிக்கு அனுப்பி தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தேன்சிட்டு இதழில் வெளிவரும். Ø மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படங்கள் மாணவருடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பறியது. இக்காட்சி ஊடகத்தை மாணவர்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவது இம்முயற்சியின் நோக்கமாகும். திரையிடப்படவேண்டிய படங்கள் அடங்கிய குறுந்தகடுகள் ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். திரைப்படக் காட்டி (Projector) இல்லாத பள்ளிகள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக வாடகைக்குப் பெற்று திரையிடவேண்டும். ஆசிரியர் முன்பு சம்பந்தப்பட்ட படம் திரையிடப்படுவதற்கு மாணவர்களிடம் திரைப்படம் குறித்து சிறு உரையாற்ற வேண்டும். திரைப்படம் முடிந்த பிறகு ஏதேனும் 5 மாணவர்களை ஆசிரியர் கண்டறிந்து அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் 2-3 நிமிடங்கள் திரைப்படம் குறித்து பேசச்செய்ய வேண்டும். பின்னர், அனைத்து மாணவர்களையும் திரைப்படம் குறித்து இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தம் சொந்த நடையில் எழுதித்தரச் சொல்லவேண்டும். இது, படம் குறித்த விமர்சனமாகவோ, பாத்திரம் குறித்த திறனாய்வாகவோ. படக்கதைச் சுருக்கமாகவோ, படத்தில் தான் உணர்ந்தவற்றை விவரிப்பதாகவோ இருக்கலாம். அனைத்து மாணவர்களின் படைப்புகளையும் கம்பிப் பந்தல் வாயிலாகவோ, வேறு முறைகளிலோ ஆவணப்படுத்த வேண்டும். சிறந்த படைப்புகளை துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் இடம்பெறச் செய்ய அனுப்பி வைக்கவேண்டும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெறும் சுமார் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். 

 
மூன்றாவது வாரத்தில் நாடகம் / கூத்துக் கலை சார்ந்த செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பாடநூல்களில் இடம்பெற்றுள்ள நாடகத்தையோ, பள்ளி / பொது நூலகத்திலிருந்து நாடகம் தொடர்பான நூல்களிலிருந்தோ. தமிழ் பாடநூலிலுள்ள இலக்கியப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோ  நாடகமாக உருவாக்கி நடிக்க  மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். பள்ளிக்கு அருகாமையிலுள்ள நாடகக் கலைஞர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு நாடகம் குறித்த நுணுக்கங்களை அறிமுகப்படுத்தலாம். திருவண்ணாமலை. வேலூர் போன்ற மாவட்டங்களில் கூத்துக்கலை கிராம அளவில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதுபோல, பள்ளிக்கு அருகாமையில் நாடகம், கூத்து, தோல்பாவை போன்ற கலை வடிவங்களைப் பின்பற்றும் கலைஞர்கள் இருப்பின் அவர்களை இச்செயல்பாடுகள் குறித்து பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். இதுகுறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வழங்கப்படும். இச்செயல்பாடுகளை மாத வாரியாக ஆவணப்படுத்துதல் அவசியமாகும். நான்காவது வாரத்தில் இசை / வாய்ப்பாட்டு / நடனம் / பாரம்பரியக் கலை சார்ந்த செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாணவர்களுடைய கலை ஆர்வத்தை ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை மேம்படுத்துவது, பாரம்பரியக் பள்ளியளவில் கொண்டு சேர்ப்பது ஆகியவை கலைகளை இச்செயல்பாடுகளின் முக்கிய நோக்கமாகும். பள்ளிகள் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க இசை, வாய்ப்பாட்டு, நடனம், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், கிராமியப் பாடல் போன்றவற்றில் (இவற்றில் கூறப்படாத, அந்தந்த பகுதிகளிலிருக்கும் கலைகளையும் சேர்த்து) பயிற்சி அளிக்கலாம். அரசு இசைப்பள்ளி கல்லூரி, ஜவஹர் சிறுவர் மன்றம் போன்ற அரசு அமைப்புகளிடமிருந்தும் தனியார் கலைக் கல்வி நிறுவனங்களிடமிருந்தும். கலைஞர்களை அழைத்து வெவ்வேறு கலை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கலாம். வடிவங்களை அரசாணை 163, நாள்.10.07.2017இன் படி கலைத் திருவிழா நடத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பங்கேற்பர். மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெறும் சுமார் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

மேற்கூறிய கல்விசாரா செயல்பாடுகள் தவிர செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணியர் மற்றும் செஞ்சுருள் சங்கம் போன்றவற்றிற்கான செயல்பாடுகளை பள்ளி வேலை நாட்களில் காலை / மாலை நேரங்களில் விருப்பமுள்ள மாணவர்களைக் கொண்டு திட்டமிடலாம். பள்ளிக் கால அட்டவணை / பள்ளி நாட்காட்டி 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் பள்ளி தொடங்கும் நாள், தேர்வுகள் நடைபெறும் நாள், ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி, தலைமையாசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி, மன்ற செயல்பாட்டிற்கான பயிற்சி, எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயிற்சி, தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி, பருவத் தேர்வு அட்டவணை மற்றும் 10.11.12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடக்கம் என பல்வேறு தரவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் அரசு /அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் நாட்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பின்பற்றி வரும் கல்வியாண்டு சிறப்புற அமைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்ககல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2023-2024 கல்வியாண்டில் பள்ளிக்கான/வகுப்புக்கான/ ஆசிரியர்களுக்கான கால அட்டவணைகள் EMIS தளத்தின் வாயிலாக எளிதாக உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரம், முடியும் நேரம், ஒவ்வொரு வகுப்பிற்கும் வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்களின் விவரங்களை உள்ளீடு செய்தபிறகு வகுப்புவாரியாக, ஆசிரியர்வாரியான கால அட்டவணையை உருவாக்கலாம். இந்த விவரத்தினை அனைத்து அரசு/அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்து கால் அட்டவணை தயாரித்தல் பணியினை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதை எவ்வாறு செய்திட வேண்டும் என்ற காணொளியும் அனைவருக்கும் பகிரப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் கீழ்க்காணும் தலைமையாசிரியர்கள் / அனைத்து வகை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நடைமுறைகளையும் பின்பற்றுமாறு © உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் உடற்கல்வி குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாடவேளைகளில் விளையாட வைக்கவேண்டும். வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்யவேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். தலைமையாசிரியர் / உதவி தலைமையாசிரியர் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை தவறாமல் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். © காலைச் சிற்றுண்டி அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும், தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம் ஐந்தாம் பாடவேளை ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்கள் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், பள்ளி நூலகத்திலுள்ள நூல்கள்போன்றவற்றை வாசிக்கச் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் அனுபவப் பகிர்வு 1 நீதிபோதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் நூலகச் செயல்பாடுகளுக்கென நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பார்வையில் கண்ட சுற்றறிக்கையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை செவ்வனே பின்பற்ற வேண்டும். 

 ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த (பள்ளிகளுக்கு உகந்த வேறு தினம் இருப்பின் அந்த தினத்திலும் நடத்திக்கொள்ள) வழங்கப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு கூட்டம் பெற்றோர் ஏற்கனவே அதே நாளில் Lidt af முன்பு அந்தந்த வகுப்புகளில் நடத்தப்பெற வேண்டும். இக்கூட்டத்தில் ஆசிரியர், பெற்றோரிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல் நலம், மன நலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், ஒவ்வொரு நாளும் வீட்டில் மாணவரின் கற்றல் சார்ந்து பெற்றோர் செய்யவேண்டிய பணிகளையும் எடுத்துக்கூற வேண்டும். மேலும், பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், அதனை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக்குழு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கவேண்டும். 

இணைப்பு : 

1.2023-2024 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி. 

2. பள்ளி கால அட்டவணை மாதிரி கட்டகம். தொடக்கக் கல்வித் துறைக்காக 2 பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி). (மின்னஞ்சல் வழியாக) நகல் 1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச் செயலகம், அறிவுரைகள் மேலாண்மைக்குழு 3,4/7 பள்ளிக் கல்விதீ துறைக்காக சென்னை - 9. 2. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6. 3. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை-6. 4. ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், சென்னை-5 5. இயக்குநர், பழங்குடியினர் நல இயக்குநரகம், சென்னை-5. 6. இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநரகம். சென்னை-5. 7. துணை ஆணையர் (கல்வி), சென்னை மாநாகராட்சி அலுவலகம், சென்னை.

No comments:

Post a Comment