தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 6413 / டி1/2023, நாள். 16.05.2023 

பொருள் : தொடக்கக் கல்வி - 2023-2024-ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல் - சார்பு. - 

பார்வை 1 அரசாணை (நிலை) எண். 176, பள்ளிக் கல்வித் (பக5(1)த் துறை, நாள்-17.12.2021. 2 பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண்.21243/சி3/இ1/2023, நாள்-26.04.2023 மற்றும் 11.05.2023 
பார்வை 2-ல் காணும் செயல்முறைகள் மூலம் 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. தற்போது தொடக்கக் கல்வி துறைக்கான இணைப்பில் காணும் திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) தெரிவிக்கலாகிறது. 
இணைப்பு – திருத்திய கலந்தாய்வு அட்டவணை. 
தொடக்கக் கல்வி இயக்குநர். 

பெறுநர் : அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி). 16.5.23



Post a Comment

Previous Post Next Post

Search here!