டிரைவர் வேலை 

இந்தோ-திபெத் எல்லை காவல் படையில் 458 டிரைவர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் கன ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 26-7-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 27-7-1996-க்கு முன்பாகவோ, 26-7-2002-க்கு பின்பாகவோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. 

அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு நடைமுறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-7-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.itbpolice.nic.in/ என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.


Post a Comment

Previous Post Next Post

Search here!