தேர்வில் தவறான கேள்வி என வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி தேர்வில் தவறான கேள்வி என வழக்கு ெதாடர்ந்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்கி இருப்பதாக ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தெரிவித்தனர். 

 ஆசிரியர் தேர்வு தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வினாக்கள் தவறாக இடம் பெற்றதாக கூறி, அந்த கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்கும்படி சிலர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்கள் அளித்து வழக்கு தொடர்ந்தவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டது. அவமதிப்பு வழக்கு அந்த உத்தரவை முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி தாரணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். 

 இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோரை கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் தற்போது வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதிகள் அனிதா சுமந்த், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த அதிகாரிகள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். 

தவறும்பட்சத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர் இதையடுத்து நேற்று அதே நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதீப் யாதவ், லதா ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். இதையடுத்து அவமதிப்பு மனு தாக்கல் செய்த தாரணி என்பவருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டு உள்ளது என்று அரசு வக்கீல் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Post a Comment

أحدث أقدم

Search here!