67 வயதில் 10-ம் வகுப்பில் படிக்க சேர்ந்த நடிகர் 
பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ். இவர் தமிழில் ஆடும் கூத்து, நண்பன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்றுள்ளார்.தற்போது இந்திரன்ஸ்க்கு 67 வயது ஆகும் நிலையில் கேரள மாநில எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்புக்கு இணையான வகுப்பில் கல்வி கற்க இணைந்துள்ளார். மேலும் அரசின் எழுத்தறிவு திட்ட விளம்பர தூதுவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.10-ம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் இந்திரன்ஸ் வழங்கிய புகைப்படம் வைரலாகிறது. இந்திரன்ஸ் 8-ம் வகுப்பு படித்தபோது பள்ளியில் இருந்து பாதியில் நின்று விட்டதாகக் கூறப்படுகிறது.இந்திரன்ஸ் கூறும்போது,“நான் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது குறித்து அடிக்கடி வருத்தப்பட்டு இருக்கிறேன். படிப்பை பாதியில் விட்டபோது கல்வியின் மகத்துவம் எனக்கு தெரியவில்லை. அதன்பிறகு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். படித்து இருந்தால் நம்பிக்கை, தைரியம் கொண்டவனாக இருந்து இருப்பேன்'' என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!