பார்வையில் கண்ட அரசாணையில், அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற / பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) இணைப்பு 1 இல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், உயர் கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணத் தொகை (Tutition fees) தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை (Tution Fees) அல்லது ரூ.50,000/- இதில் எது குறைவோ, அத்தொகை மற்றும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத் தொகை (Tution Fee) அல்லது 15,000/- இதில் எது குறைவோ அத்தொகை தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு வட்டித் தொகையிலிருந்து செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் உயர்கல்விக் கட்டணத் தொகையை வழங்கப்பட வேண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து, தொழில் நுட்பக் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2023- 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ள பார்வையில் கண்ட அரசாணை நகல் மற்றும் (திருத்திய) படிவம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Search here!