‘ராகிங்' தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை - EDUNTZ

Latest

Search here!

Saturday, 27 April 2024

‘ராகிங்' தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை

‘ராகிங்' தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை 

‘ராகிங்' தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) உத்தரவிட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை ‘ராகிங்' ஒரு குற்றமாக கருதப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் ‘ராகிங்'கை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் உயர்கல்வி நிறுவனங்களில் ‘ராகிங்' தடுப்பு என்பது மிகவும் கட்டாயமாகும். இதற்காக விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களும் ‘ராகிங்' கண்காணிப்பு ஒழுங்குமுறைகளை செயல்படுத்துவதோடு, அதற்கான விதிமுறைகளையும் பின்பற்ற பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) உருவாக்கியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் அதை தீவிரமாக பார்க்கப்படும் என யு.ஜி.சி. எச்சரித்து இருக்கிறது. மேலும், எந்தவொரு கல்வி நிறுவனமும் ‘ராகிங்'கை தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறினாலோ, யு.ஜி.சி. விதிமுறைகளின்படி செயல்படவில்லை என்றாலோ, ‘ராகிங்' சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்க தவறினாலோ யு.ஜி.சி. விதிமுறைகளின்படி, அந்த கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யு.ஜி.சி. உத்தரவிட்டு இருக்கிறது. 

 அதிகாரம் மேலும் இதுதொடர்பாக கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து யு.ஜி.சி. சில அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர், துணை ஆணையர், மாவட்ட மாஜிஸ்திரேட்டு தலைமையில் ‘ராகிங்' தடுப்புக்குழு அமைக்கப்படும். இந்த குழு குறித்த விவரங்களை பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அவர்களின் இணையதளத்தில் தெரிவித்திருக்க வேண்டும். அதேபோல், கல்வி நிறுவனங்களில் ‘ராகிங்' எதிர்ப்பு பிரிவு, ‘ராகிங்' தடுப்பு படைகள் அமைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ‘ராகிங்'கில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ‘ராகிங்' தொடர்பான யு.ஜி.சி.யின் விதிமுறைகளை பின்பற்றாத கல்லூரியின் முதல்வர், பல்கலைக்கழக பதிவாளர் தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் பதில் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment