அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை தைத்து வழங்க திட்டம் பள்ளிக்கல்வித் துறை புதிய முயற்சி - EDUNTZ

Latest

Search here!

Saturday, 27 April 2024

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை தைத்து வழங்க திட்டம் பள்ளிக்கல்வித் துறை புதிய முயற்சி

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குழு கூட்டத்தில் இருந்து பெறப்படும் தீர்மானங்கள், புகார்கள் மீது பள்ளிக்கல்வித் துறை உடனடி தீர்வுகளை வழங்குகிறது. அந்த வகையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அதிகளவில் பள்ளி சீருடைகள் சார்ந்த புகார்கள் வந்துள்ளன. இதனை தீர்க்கும் வகையில் புதிய முயற்சியாக பள்ளிக்கல்வித் துறை சரியான அளவுகளில் சீருடைகளை தைத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் திட்டத்தை கையில் எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக முதற்கட்டமாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு, முன்னாள் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து அவர்கள் உதவியுடன் அந்தந்த பள்ளிகளிலேயே சீருடைகளை தைத்து வழங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மாணவர்களுக்கு சீருடைகளை தைப்பதற்காக சுய உதவிக்குழு அல்லது அந்த பகுதியில் தகுதிவாய்ந்த தையல் கலைஞரை (டெய்லர்) தேர்வு செய்து மாணவர்களுக்கு அளவுகளை எடுத்து, அவர்களுக்கு தேவையான துணி விவரங்களை அனுப்பி வைக்க அந்த குறிப்பிட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்களையும் வழங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment