உபரி ஆசிரியர் பணியிடங்களை குறைக்க மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

السبت، 27 أبريل 2024

உபரி ஆசிரியர் பணியிடங்களை குறைக்க மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

உபரி ஆசிரியர் பணியிடங்களை குறைக்க மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு 
2024-25-ம் கல்வியாண்டில் 1.8.2023-ன்படி ஆசிரியருடன் கூடிய உபரி பணியிடங்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 1.8.2023 நிலவரப்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2 ஆயிரத்து 236 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. விரைவில் நடைபெற உள்ள பணிநிரவல் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து 30-ந் தேதிக்குள் அதிகபட்ச மாணவர் சேர்க்கைக்கான வியூகங்களை அமைத்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு கூடுதல் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்து ஆசிரியருடன் கூடிய உபரி பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. உபரியாக உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி அதுசார்ந்த ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق