எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு
துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
கல்வித்துறை தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வு முடிவு பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்து இருந்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன்.
மேலும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, /results.digilocker.gov.in/ என்ற இணையதளங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் இணைந்து தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 13-ந்தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் வரை மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே நடத்தப்பட உள்ளன.
இதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடவாரியான ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தேர்வு மதிப்பெண்கள் ‘எமிஸ்' தளத்தில் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து துணைத்தேர்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருக்கிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق