பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 19-06-2024 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 18 June 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 19-06-2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 19-06-2024 
திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: கல்வி குறள் எண்:397 யாதானும் நாடாமால் ஊராமால் என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு. பொருள்:கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்;ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்? 

பழமொழி : A wild goose never laid a tame egg. புலிக்குப் பிறந்தது பூனையாகாது. 

இரண்டொழுக்க பண்புகள் : 

 1.நல்ல ஆரோக்கிய உணவுகள், பழங்கள் உண்டு நன்கு நீரும் அருந்துவேன். 

 2.ஆரோக்கியமற்ற துரித உணவுகள், பொரித்த உணவுகள் தவிர்ப்பேன். 

பொன்மொழி : 

யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். அப்துல் கலாம் 

  பொது அறிவு : 

1.உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது? விடை: சீனா 

 2. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது? விடை: ரஷ்யா (காஸ்பியன் கடல்) 

English words & meanings : 

Conspire-சதி, collude- இரகசிய உடன்பாடு வேளாண்மையும் வாழ்வும் : விவசாயம் என்பது விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் உணவு, நார்ச்சத்து, உயிரி எரிபொருள், மருந்துகள் மற்றும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்களை வளர்ப்பதாகும். 

ஜூன் 19 ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள் 

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார். 

நீதிக்கதை முயற்சியின் பலன் 

ஒரு நாட்டின் அரசர் போட்டி ஒன்றை அறிவித்தார். ஒருவராக மட்டும் கோட்டை கதவுகளை கைகளால் திறந்து தள்ள வேண்டும். வென்றால் நாட்டின் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவரின் கைகள் வெட்டப்படும் என்று அறிவித்தார். மக்கள் பலவாறு யோசித்து, எவரும் போட்டியில் கலந்து கொள்ள முன் வரவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் பங்கேற்க முன் வந்தார். அவரிடம் மற்றவர்கள் கேட்டனர்,' நீ தோற்றால் உனது உனது கைகள் வெட்டப்படும் உன் எதிர்காலம் என்னவாகும்?". "வென்றால் அரசு பகுதி கிடைக்கும் தோற்றால் கைகள் தானே போகும் உயிரில்லையே?" முயற்சி செய்து பார்க்கிறேன், என்று கூறிய இளைஞன் தன் முழு பலத்துடன் கோட்டை கதவுகளை தள்ளினான், என்ன அதிசயம்! கோட்டை கதவுகள் மெதுவாக திறந்தன.ஏனென்றால் கோட்டை கதவுகளுக்கு தாழ்ப்பாள் போடப்படவில்லை. இளைஞனுக்கு பரிசும் பாராட்டும் அளிக்கப்பட்டது. பல பேர் இப்படித்தான் தோற்றுவிடுவோமோ எதையாவது இழந்து விடுவோமோ என்று முயற்சிக்காமலே இருந்து விடுகிறார்கள். 

இன்றைய செய்திகள் 19.06.2024 

 💥மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் குழு அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக அரசிடம் நேற்று சமர்ப்பித்தார். பள்ளி பெயர்களில் சாதிய அடையாளம் நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

 💥கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

 💥தமிழகத்துக்குள் விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

💥உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் பேரிடர் மேலாண்மை பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. 

💥ராணுவத்துக்கான கவச வாகனங்களை இணைந்து தயாரிக்க திட்டம்: இந்தியா - அமெரிக்கா பேச்சில் முன்னேற்றம். 

💥பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: ஸ்வீடன் நிறுவன ஆய்வறிக்கையில் தகவல். 

💥ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கு எதிராக 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. 

💥இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டிமாக் நீக்கம். 

💥இந்திய கோல்ப் வீரர் ஷுபாங்கர் சர்மா ஒலிம்பிக்கிற்கு தகுதி. 

 Today's Headlines 

💥Retired Justice Sanduru submitted a one-man committee report to the Tamil Nadu government yesterday to prevent caste violence among students. It has recommended various aspects including removal of caste identification in school names. 

💥Chief Minister Stalin initiated the next phase of archeological excavations at eight places in Keezhadi and its nearby archaeological site Kontakhai, Vembakottai, Keezhnamandi, Porpanaikottai, Tirumalapuram, Chennanur, Kongalnagaram and Marungur. 

 💥Traffic authorities have been ordered to immediately confiscate other state omnibuses operating in violation of rules within Tamil Nadu. 

 💥UGC has announced that Disaster Management has been newly included in the NET Eligibility Test for the post of Assistant Professor. 

 💥 Plan to jointly manufacture armored vehicles for the military: There is Progress in India-US talks. India Has More Nuclear Weapons Than Pakistan: Swedish Institute Report 

 💥Bangladesh became the last team to advance to the Super 8 round after winning by 21 runs against Nepal in the ICC T20 Cricket World Cup. 

 💥Stimag was sacked from his position as head coach of Indian football team. 

 💥Indian golfer Shubangar Sharma qualifies for Olympics. 

  Prepared by Covai women ICT_போதிமரம்Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment