குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 29 June 2024

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ படிக்கும் வட்டங்கள் மூலம் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.எஸ்.யு.ஆர்.பி., டி.ஆர்.பி. போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் டி.என்.பி.எஸ்.சி.யால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 2,327 காலிப்பணியிடங்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட இருக்கிறது. மேலும் பயிற்சி தேர்வுகள், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான மென் பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இணையதளத்தில் பதிவு செய்து, மென் பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதுதவிர காணொலி பாடக்குறிப்புகள் ‘TN Career Services Employment'என்ற யூ-டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற இலக்கை கொண்ட போட்டித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment