என்ஜினீயரிங் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 8 June 2024

என்ஜினீயரிங் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 6-ந்தேதி முதல் கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது. என்ஜினீயரிங் படிப்புக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். அவர்களில், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேரடி 2-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பாலிடெக்னிக் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnlea.com என்ற இணையதளத்தின் வாயிலாக நேரடி 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கு அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment