இந்த ஆண்டுக்குள் 2,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 28 June 2024

இந்த ஆண்டுக்குள் 2,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா பேசும்போது, ராணியார் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டவேண்டும். எங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து பேசினார். 

அப்போது அவர், முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் பள்ளிகளில் எல்லாம் ரூ.3 ஆயிரத்து 470 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது கூட 2 ஆயிரத்து 2 இளநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இந்த ஆண்டுக்குள் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.


No comments:

Post a Comment