ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 28 June 2024

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகளை தவிர, அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன. 


அதன்படி, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும். அதாவது, மேல்நிலைப் பள்ளிகளில் 1,500 மாணவ-மாணவிகள் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1,501 முதல் 3,000 வரை 2 பேர், 3,001 முதல் அதற்கு மேல் 3 பேர் என்ற அடிப்படையிலும், உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியிடம் என்ற அடிப்படையிலும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி என கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணிநிரவல் செய்யப்படவேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment