மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை 09-07-2024 முதல் 11-07-2024 க்குள் EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பார்வை 20 காணும் அரசுக் கடிதத்தில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்
கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம்
கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அனுமதிக்கப்பட்டது. அதன்படி
கலந்தாய்விற்கான காலஅட்டவணை பார்வை-3ல் காணும் செயல்முறைகளின் மூலம்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பப்பட்டது.
தற்போது கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம்
அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான (இடைநிலை
ஆசிரியர்,
தலைமை ஆசிரியர் மற்றும்
பட்டதாரி ஆசிரியர். தொடக்கப்பள்ளி
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்) ஒன்றியத்திற்குள். கல்வி மாவட்டத்திற்குள்.
வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதலுக்கான
விண்ணப்பங்களை 09.07.2024 முதல் 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்கவும்,
ஒன்றித்திற்குள் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மாவட்டக் கல்வி அலுவலராலும்
(தொடக்கக் கல்வி). வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இரண்டு
மாவட்டக் கல்வி அலுவலர்களாலும் (தொடக்கக் கல்வி)
சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.
விண்ணப்பங்கள்
மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் இருவரில் யாராவது
ஒருவர் அவரது முழுத்தகவலுடன் மற்றொரு ஆசிரியரின் முழுத்தகவலினையும்
சேர்த்து கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق