பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் - DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 2 July 2024

பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் - DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை

பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் - DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை


பார்வையில் காணும் அரசாணையின்படி பள்ளிக் கல்வித் துறையில் அனைத்துவகை இயக்ககங்கள் / அலுவலகங்கள் நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திடவும் மற்றும் பொதுவான விருப்ப மாறுதல் ஆண்டு தோறும் நடத்திடவும் அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் / ஆசிரியர் தேர்வு வாரியம் / இயக்ககங்கள் / பள்ளிகள் / இயக்ககங்கள்/ 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், பணிபுரியும் கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் / உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர்-1.2.3 விவரங்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பணியிட வாரியாக (Category wise) தனித்தனியாக என்ற மின்னஞ்சலுக்கு a3sec.tndse@gmail.com / cosea4sec@gmail.com (05.07.2024) அன்று மாலை 5.00மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment