அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் வெங்கடநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2019-ம் ஆண்டு மார்ச் முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரை மேல்நிலைத் தேர்வை தனித்தேர்வர்களாக எழுதி, தேர்வு மையங்களில் உரிமை கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திரும்ப பெறப்பட்டு, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தற்போது தேர்வர்களால் கோரப்படாத நிலையில் அவற்றை அழித்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தனித்தேர்வர்கள் நலனை கருத்தில் கொண்டு கடைசி வாய்ப்பாக மேற்கண்ட ஆண்டுகளில் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெற்றிடாத தனித்தேர்வர்கள் சான்றிதழ்களை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். அதன் பொருட்டு காட்பாடி சித்தூர் சாலையில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் நேரில் அணுகினால் அவை வழங்கப்படும். 30-ந் தேதிக்கு பின்னர் சான்றிதழ்கள் அழிக்கப்படும்.
இதன் பின்னர் சான்றிதழ்களை பெற விரும்புவோர் 2-ம் படி சான்றிதழுக்கு உரிய கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment