பார்வை (1) இல் காணும் அரசாணையின்படி 2024-2025ம் கல்வியாண்டிற்கு அரசுப்
பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அதனடிப்படையில் பார்வை (3) இல் காணும்
செயல்முறைகளின் வாயிலாக அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம்
விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த
மாறுதல் கோரும் (Mutual Transfer) ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை
முறைமை (EMIS) இணையதள
வழியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி மனமொத்த மாறுதல் கோரும்
ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி அரசு / நகராட்சி
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக்
கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் - அறிவுரைகள்
1) பார்வை (1) இல் காணும் அரசாணை பத்தி (6) இல் கண்டுள்ளபடி
(a) ஓய்வு பெறுவதற்கு முன் குறைந்தபட்சம் இரு கல்வி ஆண்டுகள் பணிக்காலம் உள்ள
ஆசிரியர்களே மனமொத்த மாறுதல் கோர தகுதியானவர்கள்.
ليست هناك تعليقات:
إرسال تعليق