தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான "மாநில மதிப்பீட்டுப்
புலம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில்
நடத்தப்படும் மதிப்பீடானது மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து அவர்களின்
கற்றல் திறனை அதிகப்படுத்த உதவுவது ஆகும். மாணவர்களை கணினி வழி
போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாகவும், உயர் திறன் கேள்விகளுக்கு
பதிலளிக்க பழக்கும் விதமாகவும் இந்த வினாடி வினா மதிப்பீடு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் பயிற்சி வினாக்களுக்கு மட்டுமல்லாமல் பாடத்தினுள் இருந்து
கேட்கப்படும் உயர் திறன் வினாக்களுக்கும் பதிவளிக்கும் பயிற்சியாகவும் இந்த
மதிப்பீடு அமைந்துள்ளது.
இது தொடர்பாக உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள
அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக
பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
1. தமிழ்நாட்டில் உள்ள
உயர்
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள
தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைத்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும்
இணைப்பு - 1 இல் உள்ளவாறு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான
வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
2.இந்த வினாடி வினா நிகழ்வை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்
அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் நடத்த வேண்டும்.
3.உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் குறைபாடுகள்,
வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண
14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment