நவோதய வித்யாலயாவில் 6ஆம் வகுப்பில் சேர விண்ணபிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 23 July 2024

நவோதய வித்யாலயாவில் 6ஆம் வகுப்பில் சேர விண்ணபிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6ஆம் வகுப்பில் சேர விண்ணபிக்கலாம் 


காரைக்கால், ஜூலை 22: நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி. நிர்வாகம் கூறியுள்ளது. 

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளை யம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹர் நவோதய வித்யாலயா முதல்வர் ஜெ.கற்பகமாலா திங்கள்கிழமை வெளி யிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2025-26-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சேர்வதற்காக நவோதய வித்யாலயா தெரிவு நிலைத் தேர்வு நடத்தவுள்ளது. 

தேர்வு எழுத விரும்பும், தற்போது (2024-25-ஆம் கல்வியாண்டில்) காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5- ஆம் வகுப்பில் பயிலும், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம். நவோதயா வித்யாலயா சமிதியின் www.navodaya.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பங் களை பதிவிறக்கம் செய்வதற்கு 16.9.2024 கடைசி நாளாகும். 

இந்த அரிய வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெற்றோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment