பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் இடமாற்றம்! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 16 July 2024

பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் இடமாற்றம்!

பள்ளிக்கல்வித்துறையின் 9 இணை இயக்குனர்களை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனராக (நிர்வாகிகள்) சுகன்யா, தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனராக (நிர்வாகம்) கோபிதாஸ், பள்ளிக்கல்வியின் மேல்நிலை கல்வி இணை இயக்குனராக ஞானகவுரி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் (உதவி பெறுபவை) இணை இயக்குனராக சாந்தி, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனராக ராமகிருஷ்ணன், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் (தொழிற்கல்வி) இணை இயக்குனராக ஜெயக்குமார், மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனராக முனுசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனராக ஆனந்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment