பூங்கா, மூலிகை தோட்டம் அமைப்பு: இயற்கையோடு இணைந்த அரசு பள்ளி - EDUNTZ

Latest

Search Here!

Monday, 8 July 2024

பூங்கா, மூலிகை தோட்டம் அமைப்பு: இயற்கையோடு இணைந்த அரசு பள்ளி

பூங்கா, மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளதால், இயற்கையோடு இணைந்த அரசு பள்ளியாக மாறி உள்ளது. 
காய்கறி தோட்டம் நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், இயற்கையோடு இணைந்த பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகே ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஷோபா பேசுகையில், பள்ளி வளாகத்தை சுற்றி 50-க்கும் மேற்பட்ட சோலை மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. 
பூங்கா, மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள் காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார். 
கற்றல் திறன் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறியதாவது:- பள்ளி மாணவர்களுக்கு மூலிகைகள், அதன் மருத்துவ பயன்கள் குறித்து கற்றுக் கொடுக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்ட பூங்கா, மூலிகை தோட்டங்கள், சுற்றிலும் உள்ள மரங்கள் காரணமாக தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், பறவை இனங்கள், அணில் போன்றவை அதிகம் வருவதை காண முடிகிறது. ஓடைக்காடு சுற்றியுள்ள கிராமத்திற்கு பல்லுயிர் பெருக்கத்தினை மேம்படுத்த இந்த குறும் காடுகள் பேருதவியாக இருக்கிறது. 
இயற்கை விவசாயத்தை மாணவர்கள் தங்களது வீட்டிற்கும் கொண்டு சென்றது சிறந்த செயல்பாடாக உள்ளது. இதேபோல் அனைத்து பள்ளிகளும் மாணவர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். மாணவர்களிடம் ஒரு விஷயத்தை நேரில் காண்பிக்கும் போது, கற்றல் திறன் மேம்படும். எனவே, பிற பள்ளிகளிலும் இதுபோன்ற மாதிரி பூங்காக்களுடன் இயற்கையோடு இணைந்த பள்ளியை ஏற்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment