பஸ் பயண அட்டை பெற மாணவர்கள் விவரங்களை உயர் தொழில்நுட்ப ஆய்வகம் பயிற்றுனர் மற்றும் ஆய்வக உதவியாளர்களை பயன்படுத்தி, ‘எமிஸ்' தளத்தில் பதிவுசெய்ய கல்வித்துறை உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 4 July 2024

பஸ் பயண அட்டை பெற மாணவர்கள் விவரங்களை உயர் தொழில்நுட்ப ஆய்வகம் பயிற்றுனர் மற்றும் ஆய்வக உதவியாளர்களை பயன்படுத்தி, ‘எமிஸ்' தளத்தில் பதிவுசெய்ய கல்வித்துறை உத்தரவு

பஸ் பயண அட்டை பெற மாணவர்கள் விவரங்களை ‘எமிஸ்' தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு 
2024-25-ம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பஸ் பயண அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மையம் (‘எமிஸ்') இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் எமிஸ் தளத்துக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணியை உயர் தொழில்நுட்ப ஆய்வகம் பயிற்றுனர் மற்றும் ஆய்வக உதவியாளர்களை பயன்படுத்தி, உடனடியாக செய்து முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment