ஓட்டு வீட்டில் இருந்து படித்த மாணவி, ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்று கருமந்துறை பழங்குடியின மாணவி சாதனை படைத்து உள்ளார்.
ஜே.இ.இ. தேர்வு சமீபத்தில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யாவும்(வயது 18) தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி.யில் புரடக்ஷன் என்ஜினீயரிங் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
மாணவி சுகன்யா சேலம் மாவட்டம் கரியகோவில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். 3 வயதில் தனது தாயை இழந்த சுகன்யா, லட்சுமணன் - சின்னபொண்ணு ஆகியோரது அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டி.யில் படிக்க இடம் கிடைத்த முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மாணவி பேட்டி ஓட்டு வீட்டில் இருந்து ஜே.இ.இ. தேர்வில் சாதிக்கும் அளவு உயர்ந்தது குறித்து மாணவி சுகன்யா கூறியதாவது:-
கல்வியின் மீது இருந்த ஆர்வம் காரணமாக நன்றாக படித்ேதன். மேலும் டாக்டர் ஆவும் கனவு எனக்கு இருந்தது. இந்நிலையில் இதற்காக பழங்குடி இன சாதி சான்று கிடைப்பது சிரமம் இருந்ததால் ஆசிரியர்கள் உதவியோடு மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோரை சந்தித்து சாதி சான்றிதழ் பெற்று நீட் தேர்விற்கு விண்ணப்பித்தேன். இருந்த போதும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மனம் தளராமல் ஜே.இ.இ. தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் எனது அண்ணனுக்கு சாதி சான்று இல்லாத காரணத்தினால் மேற்படிப்பு படிக்க முடியவில்லை. என்னோடு பயின்ற மாணவிகள் பலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். சாதி சான்றிதழ் இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு சாதி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment