உப்பிற்கும், நாம் பெறும் சம்பளத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உப்பின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. உப்பு தொடர்பான இந்த சுவாரஸ்யமான வரலாற்றை அறிந்து கொள்வோம்.
மனிதர்கள் வாழ்வதற்கு உப்பு இன்றியமையாதது.
பண்டைய காலத்தில் நீர்நிலைகளுக்கு அருகில் உப்பு பெறக்கூடிய அல் லது உப்பை எளிதில் வர்த்தகம் செய்யக்கூடிய இடங்களில் மக்கள் குடியேறத் தொடங்கினர்.
கி.மு. 450 மற்றும் 550-க்கு இடைப்பட்ட காலத்தில், ஒருவருக்கு உப்பு கொடுப்பது ஊதியம் கொடுப்பதற்கு சமமாக கருதப்பட்டது. அதிகார வர்க்கத்தால் உப்பு வினி யோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக உப்பு இருந்தது. ஒரு காலத்தில் உப்பின் விலை மிக அதிகமாக இருந்ததால், அதுவே மக்க ளுக்கு சம்பளமாகவும் கொடுக்கப்பட்டது.
உப்பு நாணயமாக வணிகத்தில் பயன்படுத்தப்பட்டது. ரோமானியப் பேரரசில் பணிபுரிந்த சிப்பாய்கள் சில சமயங்களில் பணத்திற்கு பதிலாக கைநிறைய உப்பை பெற்றனர்.
சீனர்கள், ஹீப்ருக்கள் மற்றும் கிரேக்கர்கள் அனைவரும் உப் பின் மதிப்பை புரிந்தவர்களாக இருந்தனர். ‘சம்பளம்’ என்ற வார்த்தை லத்தீன் சொல்லான சலாரியத்தில் (சல் என்பது உப் புக்கான லத்தீன் சொல்) இருந்து வந்தது, இதற்கு ‘உப்பு பணம்’ என்று பொருள். இறுதியில் ‘சம்பளம்’ என்ற வார்த்தையாக தமிழில் உருமாறியது.
No comments:
Post a Comment