பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான
‘கியூட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிப்பு
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.
13 லட்சம் பேர் பங்கேற்பு
மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்) கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான ‘கியூட்’ தேர்வு, 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. 13 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். 15 பாடங்களுக்கு பேப்பர்-பேனா முறையிலும், மீதி 48 பாடங்களுக்கு கம்ப்யூட்டர் அடிப்படையிலும் தேர்வு நடத்தப்பட்டது.
தாமதம்
இந்த தேர்வு முடிவுகள், கடந்த 30-ந்தேதி வெளியாவதாக இருந்தன.
ஆனால் அன்றைய தினம் முடிவுகள் வெளியாகவில்லை. புதிய தேதியும் அறிவிக்கப்படவில்லை.
இதனால், பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
விரைவில் அறிவிப்பு
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளில் தேசிய தேர்வு முகமை ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வு, முறைகேடு புகாரில் சிக்கி இருக்கும்நிலையில், ‘கியூட்’ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
CUET EXAM பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிப்பு
No comments:
Post a Comment