மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 30 July 2024

மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள்

மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள்
பார்வை (1)ல் காணும். தமிழ் நாடு அரசு தலைமைச் செயலரின் நேர்முக கடித்தில், கல்வி முறைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கல்வி ஆய்வு (District Education Review) நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மறுஆய்வுக் கூட்டங்களைப் போன்று மாவட்டக் கல்வி ஆய்வு மாதந்தோறும் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குழுவின் (DLMC) தலைவர் என்ற முறையில், இந்த மதிப்பாய்வில் மாவட்ட ஆட்சியரின் தலைமையானது, அனைத்து பங்குதாரர்களும் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமையாகப் அறிந்திருப்பதையும், எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற்றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. 
மேலும், குழந்தைகளின் தல்வி சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் ஒருநாள் நடத்த தலைமையில் கல்வி வளர்ச்சி குறைதீர் நாள்" மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள் என என அனைவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


No comments:

Post a Comment