மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 127 புதிய புத்தகங்கள் கல்வித்துறை தகவல் - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 12 سبتمبر 2024

மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 127 புதிய புத்தகங்கள் கல்வித்துறை தகவல்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 
முதற்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் ரூ.10 கோடியில் 53 புத்தகங்கள், 90 லட்சத்து 45 ஆயிரத்து 18 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை ஒரு கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 48 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. 
செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியுள்ள மாணவர்களை நெறிப்படுத்த நூல் வாசிப்பு உதவும் என்பதால், வாசிப்பு இயக்கத்தை மாணவ-மாணவிகள் மத்தியில் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 124 புத்தகங்கள் 2 கட்டங்களாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதற்கான புத்தக தயாரிப்பு பணிமனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே இந்த பணிகளை முடித்து சுமார் 2 கோடியே 20 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு தரும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق