01.01.2024 நிலவரப்படி BT to PG Promotion வழங்க தகுதியானோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 28 October 2024

01.01.2024 நிலவரப்படி BT to PG Promotion வழங்க தகுதியானோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

01.01.2024 நிலவரப்படி BT to PG Promotion வழங்க தகுதியானோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப் பணியின்கீழ் அமைந்துள்ள அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01012024 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்றி மாவட்ட வாரியாகத் தயார் செய்து பெயர் பட்டியல் மற்றும் கருத்துருக்கள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் (நகராட்சிப் பள்ளிகளில் 01061986க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்கள் இருப்பின் பட்டியல் தனியாக அனுப்பப்பட வேண்டும்.) ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஆகியோர் சார்ந்த விவரங்கள் தயாரிக்கப்படவேண்டும். 

2 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள், அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்கள் மற்றும் கருணை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் (சுய விவரம் அடங்கிய கருத்துருக்கள்) சார்ந்த அரசு,நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பெற்று இணைப்பில் குறிப்பிட்ட படிவம் IIல் தனியாக இவ்வியக்ககத்திற்கு நேரில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment