தலைமை பண்பை வளர்க்கும் வகையில் பள்ளிகளில் ரூ.2 கோடியில் மாணவர்கள் குழு திட்டம் கல்வித்துறை தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 6 October 2024

தலைமை பண்பை வளர்க்கும் வகையில் பள்ளிகளில் ரூ.2 கோடியில் மாணவர்கள் குழு திட்டம் கல்வித்துறை தகவல்

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் ''மகிழ் முற்றம்'' என்ற பெயரில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மாணவர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்கள் மூலம் மாணவர் தலைவர்கள், அமைச்சர்கள் மாதிரி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். 
இதில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்பார்கள். இதற்கென்று ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கப்பட உள்ளது. 

மேலும் மாணவர்கள் குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மையுடன் செயல்படுதல், வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை வளர்ப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு குழுவுக்குமான மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், தலைமை பொறுப்பு ஆசிரியர், குழுவுக்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி ஏற்பு விழா என்பது அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14-ந்தேதியன்று நடைபெறுவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment