2024-2025ஆம் ஆண்டிற்கான வானவில் மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

الاثنين، 7 أكتوبر 2024

2024-2025ஆம் ஆண்டிற்கான வானவில் மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் - நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 13,236 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது. 

வானவில் மன்றம் - சிறப்பு நோக்கங்கள் 

மாணாக்கர்கள் சிந்தனையில் புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்க ஆர்வமூட்டுதல் மற்றும் அவர்களால் உ -ருவாக்கப்படும் மாதிரிகளுக்கு உரிய காப்புரிமையை பெற வழிகாட்டுதல். மாணாக்கர்கள் பல்வேறு திறனறித் தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்க தேவையான அடிப்படை விவரங்களை வழங்கி ஊக்கமளித்தல். (International / National Science and Math Olympiad, NSTSE, Geogenius, NBC, ASSET, NSEJS, HBBVS, NMMS, TRUST. Inspire Award. etc) ஆய்வு மாதிரிகள் தயாரித்தலில் சிறந்த பங்களிப்பை வழங்கி பரிசு பெறும் மாணாக்கர்களை ISRO. Kudankulam Atomic Power Station, IIT, Kavalur Observatory, CLRI போன்ற மாநில தேசிய அறிவியல் மையங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்களுக்கு கல்வி சுற்றுலா / களப்பயணம் அழைத்துச் செல்லுதல். புதிய செயல்திட்ட மாதிரிகளை உருவாக்கி பரிசு பெறும் மாணாக்கர்களை அயல்நாடுகளில் உள்ள உயர்கல்வி /அறிவியல் மையங்களுக்கு பார்வையிட வாய்ப்பு அளித்தல், 8ஆம் வகுப்பில் உள்ள கணிதம் மற்றும் அறிவியலில் மீத்திறன் மிக்க மாணாக்கர்களை இனங்கண்டு மாதிரி பள்ளிகளில் சேர்க்கை செய்து தொடர்ந்து கண்காணித்து IT, NIT மற்றும் IISC போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை செய்திட உதவுதல்.

ليست هناك تعليقات:

إرسال تعليق