பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.10.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

இங்கே தேடவும்!

Friday, 18 October 2024

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.10.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

பார்வை-(1)-ல் கண்டுள்ள அரசாணைப்படி அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது 2024 ஆகஸ்ட் மாதம் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பள்ளி வாரியாக EMIS இணையத் தளத்தில் 90% பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மீதமுள்ள 10% பள்ளிகளின் உறுப்பினர்கள் விவரங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. உறுப்பினர் பதிவினை முதல் கூட்டதிற்கு முன்னாதாக 100% நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. 2024-2026 ஆண்டுகளுக்கானப் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது 25.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 03.00 முதல் 04.30 மணி வரை கீழ்காண் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இது முதல் கூட்டம் என்பதால் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் 100% பங்கேற்பதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு பள்ளியின் நலனில் முக்கியப் பங்குவகிக்கிறது. 

இக்குழுவில் இயற்றப்படும் தீர்மானங்களை உரிய துறைகள் நிறைவேற்றிக் கொடுக்கவும், மற்றும் இதர கல்வித் துறைச் சார்ந்த முன்னேற்றங்களை உரிய முறையில் கண்காணிக்கவும், வழிகாட்டவும் மாநில, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையுடன் தொடர்புடைய அரசுத் துறைகளை இணைத்துச் துறைசார் செயலர்களை 
உறுப்பினர்களாகக் கொண்டு தலைமைச் செயலாளர் தலைமையிலான மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (State Level Monitoring Committee-SLMC) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி மாவட்ட அளவிலான முன்னேற்றங்களை கண்காணித்து வழிகாட்டுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிக் கல்வியுடன் தொடர்புடைய துறைசார் அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுப் குழுப் பிரதிநிதிகள். குடிமைச் சமூக அமைப்பினர்களை உறுப்பினர்களாகக் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு (District Leve Monitoring Committee-DLMC) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒவ்வொரு மாதமும் கூடி பள்ளி மேலாண்மைக் குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து பொறுப்புடைய துறைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வழிகாட்டுகிறது. அதுமட்டுமல்லாது, மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறைக்கென்றே மாவட்ட கல்வி ஆய்வு (District Education Review-DER) கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தலைமைச் செயலாளரிடமிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானங்களைச் செயல்படுத்துவது உள்ளிட்டப் பள்ளிக் கல்வியுடன் தொடர்புடைய கல்விச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் உள்ளீடு செய்யப்பட்டு பள்ளியின் தேவைகள், தலைமைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட அளவிலான துறை சார்ந்த அலுவலர்கள் போன்றோருக்கு உரிய நடவடிக்கைக்காக மாநில அளவில் தொகுக்கப்படுகிறது. அவ்வாறு தொகுக்கப்படும் தேவைகள் மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர் உட்பட பிற சார்ந்த துறைகளுக்கு உரிய நடவடிக்கைக்காக EMIS DASHBOARD-இல் காண்பிக்கப்படுகிறது. இத்தரவுகள் அடிப்படையில் கண்காணிப்பும், வழிகாட்டுதலும் செயல்படுத்தப்படுகிறது. 

வழிகாட்டுதல்கள் 

(அ) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் முன்னேற்பாடுகள்: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பெயர் மற்றும் பொறுப்பு விவரங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பார்வைக்கு பள்ளித் தகவல் பலகையில் (School Information Bourd) எழுதிவைக்க வேண்டும். (i) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைக் கொண்டு பள்ளியளவில் தலைமையாசிரியர் வாட்ஸ்அப் குழுவினை (WhatsApp Group) உருவாக்க வேண்டும். 

No comments:

Post a Comment