பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 80 நாட்களாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கவில்லை.
இதனால், அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதால் ஆசிரியர்கள் நியமனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், ஆசிரியர் பணிக்கு தேந்தெடுக்கப்பட்டும் தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்ற மன உளைச்சலில் 3 ஆயிரத்து 192 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களின் மன உளைச்சலைப் போக்க போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment