மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பயிற்சி! இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! மத்திய அரசு தகவல்! - EDUNTZ

Latest

Search here!

الأحد، 13 أكتوبر 2024

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பயிற்சி! இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! மத்திய அரசு தகவல்!

படித்த இளைஞர்களுக்கு நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி (இன்டர்ன்ஷிப்) அளிக்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். 


இந்த திட்டம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக முன்பதிவு தொடங்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி www.pminternship.mca.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து உள்ளது. 21 முதல் 24 வயது வரையிலான நபர்கள் இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். அவர்கள் ஆதார் மற்றும் பயோடேட்டா மூலம் விண்ணப்பிக்க மத்திய கார்பரேட் நலத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5 ஆயிரம் நிதி உதவியுடன் 12 மாதம் பயிற்சி அளிக்கப்படும். மேலும் ரூ.6 ஆயிரம் மானியமாகவும் வழங்கப்படும். இந்த திட்டம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்துவதுடன், அவர்களின் வேலை பெறும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق