அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவ ‘வாட்ஸ்-அப்' குழு கல்வித்துறை தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 21 October 2024

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவ ‘வாட்ஸ்-அப்' குழு கல்வித்துறை தகவல்

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவும் வகையில் 2 வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. 
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர், கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள 2 முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களை நியமித்து 2 வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க வேண்டும் எனவும், இந்த குழுவில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களை இணைக்க வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. குழு உருவாக்கப்பட்ட பிறகு, அந்த குழுவில் உள்ள ஆசிரியர்களோ, நிறுவன பொறுப்பாளரோ சிறு செயல்பாடுகள், பணித்தாள்கள், பாடம் கற்பித்தல் சார்ந்த விவரங்களை பதிவிட வேண்டும். 

இது ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பணித்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சி என்று தெரிவித்துள்ள கல்வித்துறை, இதில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து ஆர்வம் காட்டாத ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment